| போர்க்கெழுத்தேகுமாறு பணித்துவிட்டு; கயம் புக்கனன் - நீராடற்குக் குளத்துக்குட் புகுந்தான்; குருசில் - வேந்தனாகிய தலைவன்; விளங்கு இழைப் பொலிந்த வேளா மெல்லியல் - விளங்குகின்ற இழைகளால் பொற்பு மிக்க மணமாகாத மெல்லிய இயல்பினையும்; கணங்கணி வனமுலை யவளொடு - சுணங்கு பரந்த அழகிய முலையினையுடைய அவளுடனே; மணம் புகு வைகல் - மணம் புரிந்து கொள்ளும் நாள்; நானையாகுதல் ஒன்று; ஆரமர் உழக்கி மறம் கிளர் முன்பின் - கடத்தற்கரி போரைச் செய்தற்குரிய மறத்தீக் கிளரும் வலியினையும்; நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு - நீண்ட இலையைுடைய வேலாற் புண்ணுற்று வடுப்பட்டவுடம்போடே, வராரவுலகம் புகுதல் ஒன்று - மேலுலகு புவகுது ஒன்று, இரண்டனுள் யாதாயினும் ஒன்று ஆகுக; என என்று வஞ்சினம் கூறி; படை தொட்டனன் - தன் படையைக் கையிலே ஏந்தினான்; ஆயிடை - அவ்விடத்து, மென்புலவைப்பின் இத தண்பணையூர் - நன்செய் வயல்கள் பொருந்திய வூராகிய இந்தமருதநிலத்தூர்; களிறு பொரக்கலங்கிய தண்கயம் போல - நீராடும் களிறுகள் தம்முட் பொருவதால் கலங்கிச் சேறாகும் குளிர்ந்த குளம்போல; பெருங்கவின் இழப்பது கொல் - இருவரும் செய்யும் போரால் பெரி தன் அழகை இழக்கும் போலும்; எ - று.
ஏந்து கோட்டல்குல், அணித்தழை யல்குல் என இயையும். தொடுத்தல், தொடலையென வந்தது. தொடலை, மாலையுமாம். செம்பொற் சிலம்பென்றும் பாடமுண்டு. பொறி, தொழிற்பாடு. எழுகணையமரம். மண்ணை யரைத்துக் கல்லறத்து இஞ்சி யெடுத்தல் முறையாதலால் அரைமண் இஞ்சி யென்றார். தமர் பிறரெனத் தெரியாது பகைவரைப் பொருதழிக்கும் தறுகண் மறவரைக் கடுங்கண் சுற்றம் என்றார். மறுத்த - மறுப்படுத்த; அறுத்த வென்றுமாம். துறக்க வுலகு வாராவுல கெனப்பட்டது; எதிர்காலத்தை வாராக் காலம் என்பது போல. நாட்டுக்கழகு தருவது அதன் பெருவளமாதலின், அதனைப் பெருங்கவின் என்றார். மென்புல வைப்பென்றும் பாடமுண்டு. தந்தை கொடானாய், மாறானாய், சினத்தனர்க் கயம்புக்கனன்; குரிசில், நானை ஆகுதல் ஒன்று, புகுதல் ஒன்று எனப் படை தொட்டனன், இத்தண்பணையூர் கவின் இழப்பது கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: ஒருவர்பாலுள்ள அரிய பொருளொன்றினைப் பெற விரும்பும் பிறர், உடையாரை வேண்டிப் பெறுவது முறை; விலை வரம் பிட வியலாததாயும், அவர்க்கன்றிப் பிறர்க்கே பயன்படுவதாயுமிருப்பின் அப் பொருளைப் பிறர் இரந்து குறையுத்துத் தரப் பெறுவது வழுவாகாது; அதனால் அன்ன தன்மையளான் மனளைப் பெற விரும்பிய பிறனொரு வேந்தன் குறையுற்றுக் கேட்டான் என்பார், வேந்து குறையுறவும் என்றும், கொடைக்குரிய மரபினையுடைய தந்தை கொடை மறுத்தான் என்பார், |