பக்கம் எண் :

283

     

“கொடாஅன்”  என்றும்  கூறினார்,   வேந்தன்   விழைந்த   மகளை,
தழையணிந்தியலும் அல்குலும் சிலம்பணிந்து   பொலியும்   இளமையும்
உடையளெனச்சிறப்பித் தோதுதலின், தந்தை ஒருகால் தன மகளது இளமை
கூறிக் கொடை மறுத்தான்போலும் என எண்ணற்கிடமுண்டாகிறது. மாற்றம்,
மாறுபட்டுரைக்கும் சொல்; இது வங்சினம் கூறுவது; போரிடையே எதிர்நின்று
பொரும் வீரர் மாறுபட்டுரைக்கம் சொற்களுக்குத் தானும் மாறுபட்டுரைக்கும்
உரையெனினும் அமையும். மாற்றம் மாறாமைக்குக் காரணம் மிக்க சினம்
என்றற்கு “மறலிய சினம்” எனப்பட்டது. போர்க்குச் செல்லும் மறவர் நீராடி
மாலையணிந்து ஒப்பனை செய்து கொண்டேகுவது மரபு. “மூதூர் வாயிற்
பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பி னொண்குழை மலைந்து, தெண்கிணை
முன்னர்க் களிற்றின் இயலி, வெம்போர்ச் செழியனும் காண்க. ஒன்று
மணமனை புகுதல், ஒன்று வாராவுலகம் புகுதல் இரண்டனுள் ஒன்று செய்தல்
வேண்டுமென்ற உறுதியுடன் படையைக் கையேந்தினனென்றது மகட்கொடை
வேண்டிய வேந்தனது துணிபு. இதனால் கடும்போர்நிகழ்தல் ஒருதலை
யென்பதும், அதனால் உயிர்க்கேடும் பொருட்கேடும் உண்டாதல்
தேற்றமென்பதும், கண்டு ஆசிரியர் இத் தண்பணையூர் “பெருங்கவின்
இழப்பது கொல்லோ” என இரங்கினார்.

342. அரிசில் கிழார்

     மறக்குடியில்  தோன்றிய  தமிழ்மகள் ஒருத்தியின் நலங்கண்டான்
ஒருகாளை, அவளை மணந்துகொள்ள விரும்பிச் சான்றோராகிய அரிசில்
கிழாரைக் கண்டு உசாவினன். அவர் அவனது பெருவிதுப்புணர்ந்து
“நெடுந்தகாய்! இவள் திருநயத்தக்க செவ்வியும் பண்பும் உடையளே.
ஆனால், இவளுடைய தந்தை ஒரு தண்பணைக்கிழவன்; இவளை
மணத்தல்வேண்டி வேந்தர் பலர் முயன்று இவளைப் பெறாராய்ப் பொருது
தோற்றோடினர். போரிற் பலரைக் கொன்று குவித்த பெருமாட்சியுடையர்
இவள் உடன் பிறந்தோர். நீ இதனையறிந்து செய்வன தேர்ந்து செய்வாயாக”
என இப் பாட்டால் அவனைத் தெருட்டுகின்றார்.

 கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொ லிவளென விதுப்புற்
றென்னொடு வினவும் வென்வே னெடுந்தகை
5.திருநயத் தக்க பண்பினிவ ணலனே
 பொருநர்க் கல்லது பிறர்க்கா காதே
பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்னை
மென்சேற் றடைகரை மேற்ந்துண் டதற்பின்
ஆர லீன்ற வையவி முட்டை
10. கூர்ந லிறவின் பிள்ளையொடு செறூஉம்
 தண்பணைக் கிழவனிவ டந்தையும் வேந்தரும்
பெறாஅ மையிற் பேரமர் செய்தலிற்