பக்கம் எண் :

284

     
 கழிபிணம் பிறங்குபோர் பழிகளி றெருதா
வாடக வைகலு முழக்கும்
 15.மாட்சியர் மற்றிவ டன்னை மாரே.

     திணையும் துறையும் அவை. அரிசில்கிழார் பாடியது.

     உரை: கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும் - காட்டுக் காக்ககையின்
தழைத்த சிறகையொத்த; மயிலைக் கண்ணிப் பெருந்தோள் குறுமகள் -
இருள்வாசிப்பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையுமுடைய
இளையவள்; இவள் ஏனோர் மகள்கொல் என விதுப்புற்று - இவள்
மறப்பண்பில்லாத பிறருடைய மகளாவாள்போலும் எனக் கருதி வேட்கையால்
விரைவுற்று; என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை - என்னைக்
கேட்கும் வெற்றிபொருந்திய வேலையுடைய நெடுந்தகையே; திரு நயத்தக்க
பண்பின் இவள் நலன் - திருமகளும் விரும்பத்தக்க நற்பண்புடைய இவளது
நலம்; பொருநர்க்கல்லது பிறர்க்கு ஆகாது - போர்மறவர்க்குரியதேயன்றிப்
பிறருக்கு எய்துவதரிது, பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை - பசிய
காலையுடைய கொக்கினது அகன்ற வாயையுடைய குஞ்சு; மென் சேற்று
அடைகரை மேய்ந்து  உண்டதற்பின்-  மெத்தென்ற  சேறு  பொருந்திய
அடைகரையில் மேயும் மீன்களை மேய்ந்துண்டபின்; ஆரல் ஈன்ற ஐயவி
முட்டை - ஆரல்மீன் ஈன்ற ஐயவிக் கடுகு போன்ற முட்டையையும்; கூர்நல்
இறவின் பிள்ளையொடு பெறூஉம்- மிகவும் நல்ல இறாமீனின் குஞ்சுகளையும்
தாய் தரப் பெற்றுண்ணும்; தண்பணைக் கிழவன் இவள் தந்தைமயும் -
தண்ணிய மருதநிலத்தூர்களுக்குத் தலைவனாவன் இவளுடைய தந்தையும்;
இவள் தன்னைமார் - இவளு டைய உடன்பிறந்தோர்களும்; வேந்தரும்
பெறாமையின் - வேந்தர்களும் தாம் மகட்கொடை பெறாமையால்; பேரமர்
செய்தலின் - பெரிய போரைச் செய்தலால்; கழிபிணட்ம பிறங்கு அழிபோர்பு
-போரிற் கழிந்தோருடைய பிணக்குவியல் உயர்ந்தவைக் கோற்போராகவும்,
களிறு அழி எருதா - களிற்றியானைகள் வைக்கோலை மிதித்தொதுக்கும்
எருதுகாளகவும்; வாள் தக - தமது வாளாண்மைக்கேற்ப; வைகலும் உழக்கும்
மாட்சியர் - நாடோறும் வாளுழவு செய்யும் மாண்புடையராவர்; எ - று.


     காட்டுக் காக்கை. கள்ளிக் காக்கையெனவும் வழங்கும் மறமாண்
புடைய தந்தை தன்னையரை எடுத்தோதுதலின், அஃதில்லாரை “ஏனோர்”
என்றார். வேட்கை மிகுதியால் உள்ளத்தெழும் விரைவுத் துடிப்பு,
விதுப்பெனப்படும்; அது கட்பார்வையிலும், சொற்செயல்களினும்
மெய்ப்பட்டுத் தோன்றும் உருவும் குணமும் தொழிலும் அகப்படப்
“பண்பு” என்றார் பொருநர், மறக்குடிப்பிறப்பும் பேராண்மையும்
உடையராய்,