| அவற்றால் பிறர்க்கு உவமமாகும் உயர்ந்தோர். ஐயவிபோலும் முட்டையை ஐயவி முட்டையென்றார். மகட்கொடை வேண்டியெழுந்த வேட்கை அது பெறாவழி வெகுளியாய் மாறிப் போர் செய்தற்கண் செலுத்தலின், பெறாயைின் பேரமர் செய்தலின் என்றார். நெடுந்தகை,இவள் நலன், அல்லது, ஆகாது; தந்தையும் கிழவன்; தன்னையார் மாட்சியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று: அசைநிலை.
விளக்கம்: இருள்வாசிப் பூவினை இருவாட்சி யென்பதும் வழக்கு. இப்பூ இரவில் மலர்வது. இப் பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணியணிந் திருக்குமாறு தோன்ற, மயிலைக் கண்ணி பெருந்தோட்குறுமகள் என்றார். தோள் பெருத்திருத்தல் மகளிர்க்கு மாண்பு. அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி (கலி. 108) என்று சான்றோர் கூறுவது காண்க. கேடபோனுடைய கட்பார்வையில், அவன் அவளை மறப்பண்பில் லாதார் மகள் எனக்கருதும் கருத்துநிலவக் காண்டலின், ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று வினவும் நெடுந்தகை யென்றார். விதுப்புறவும், வென்வேல் ஏந்தும் தகைமைவழிப் பிறந்த செருக்கும் அவன் கருத்துக்கு ஏதுவாயின. திருநயத்தக்க பண்பின் இவள் என்றது, நீ விரும்புதல் பெரிதன்று என்றவாறு. கொக்கின் பிள்ளை தானே மேய்ந்துண்டதோடமையாது ஆரல் முட்டையும் இறவின் பிள்ளையும் தாய் நல்கப் பெறுமென்றது, தாமாகமற்ம்மிக்கு மறலும் இவள் தன்னமைார் தந்தையால் மிக்க போர்ப் பறிய்சியுடைய ரென்பது குறித்தவாறு. 343. பரணர் திரு மிக்கதோர் ஊர்த்தலைவனை மகட்கொடை வேண்டிப் பலர் சென்று கேட்டனர். அறிவு ஆண்மைகளால் ஒவ்வாரை என் மகளாகிய அவள் வரைந்து கொள்ளான்; ஆதலால் நீவிர் மகட்கொடை வேண்டுதலைக் கைவிடுமின் என்று சொல்லி மறுத்துவிட்டான். இம்மறுப்பு வந்தோர் பலரையும் கீழோராக்கினமையின் அவர் உள்ளத்தே சினங்கொண்டு போர்க்கு ஆயத்தராயினர். அதனையறிந்த சான்றோராகிய பரணர், தந்தையின் மறுப்பால் அவ்வூர்க்குப் போரால் எய்தக் கூடிய துன்பத்தை யெண்ணி இப் பாட்டின்கண் இரங்கிக் கூறுகின்றார். | மீனொடுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து மனைக்குவைஇய கறிமூடையாற் கலிச்சும்மைய கரைகலக்குறுந்து | 5. | கலந்தந்த பொற்பரிசம் | | கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமுங் கடற்றாரமும் தலைப்பெய்து வருநர்க்கீயும் புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் | 10. | முழங்குகடன் முழவின் முசிறி யன்ன | | நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரைய ரல்லோர் வரையல ளிவளெனத் |
|