| | தந்தையுங் கொடாஅ னாயின் வந்தோர் வாய்ப்பட விறுத்த வேணி யாயிடை | 15. | வருந்தின்று சொல்லோ தானே பருந்துயிர்த் | | திடைமதிற் சேக்கும் புரிசைப் படைமயங் காரிடை நெடுந லூரே. |
திணையும் துறையு மவை. பரணர் பாடியது.
உரை: மீன் நொடுத்து நெல் குவைஇ - மீன்களை விற்று விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவைகளால்; மனமைிசை யம்பியின் மறுக்குந்து - வீடும்உயர்ந்த தோணிகளும் பிரித்தறியவாராத படி காண்பார் மயங்கச் செய்யும்; மனைக் குவைஇய கறி மூடையால் - மனையிடத்தே குவிக்கப்பெற்ற மிளகு மூடைகள்; கலிச் சும்மைய கரை கலக்குறுந்து - ஆரவாரத்தையுடைய கரையினின்றும் பிரித்தறிவியலாதபடி காண்பார் மயங்கச் செய்யும்; சலந்தந்த பொற்பரிசும் கழித்தோணியால் கரைசேர்க்குந்து - கலங்கள் கொணர்ந்த பொன்னாகிய பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்; மலைத்தாரமும் கடல்தாரமும் தலைப்பெய்து - மலைபடு பொருளும் கடல்படு பொருளும் கலந்து; வருநர்க்கீயும் - இரவலராகிய வரவர்க்கு அளிக்கும்; பு னலங்கள்ளின் - தண்ணீர்போலக் கள்ளை மிகுதியாகவுடைய; பொலந்தார்க் குட்டுவன் - பொன்மாலை யணிந்த குட்டுவனுடைய; முழங்கு கடல் முழவின் முசிறியன்ன - முயங்குகின்ற கடலாகிய முழவையுடைய முசிறி நகரத்தையொத்த; நலஞ்சால் விழுப்பொருள் பணிந்தவந்து கொடுப்பினும்- நலஞ்சான்ற உயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து உவகையுடன் கொடுத்தாலும்; இவள் புரையர் அல்லோர் வரையலள் என - அவள் ஒப்போரும் உயர்ந்தோரும் அல்லாதாரை மணந்துகொள்ளாள் என்று சொல்லி; தந்தையும் கொடான் - தந்தையும் கொடுக்கமாட்டான்; ஆயின் - இதனை ஆராயுமிடத்து; வந்தோர் - மகட்கொடை வேண்டி வந்தவர்கள்; பருந்து உயிர்த்துச் சேக்கும் இடைமதிற் புரிசை - பருந்து இளைப்பாறியிருக்கும் இடைமதில் பொருந்திய புரிசையும்; படை மயங்கு ஆரிடை - படை யேந்திய மறவர் நின்று காக்கும் அரி வழிகளையுமுடைய; நெடுநல் ஊர் - நெடிய நல்ல வூரின்கண்; வாய்ப்பட இறுத்த ஏணி - அரண் கொள்ளுதற் பொருட்டு மேலேறுதற்கு வழியுண்டாகச் சார்த்திய ஏணிகள்; வருந்தின்று கொல் - வருந்தும் போலும்; எ - று.
நொடுத்தல், விலைக்கு விற்றல். மீனை நெல்லுக்கு விற்றலின், மீனொடுத்து நெற்குவைஇ யென்றார். உயர்ந்த அம்பிகளும் மனனக் கூரைகளும் தம்மில் ஒத்து விளங்குதலின், வேறுபாடறிய இயலாமையின், |