பக்கம் எண் :

287

     

     “மறுக்குந்து” என்றார்.  உம்  உந்தாயிற்று.  பழைய வாய்க் கடலிற்
செலுத்துதற்காகாது கெட்ட அம்பிகளை நிறுத்தி அவற்றின் மேற் குவித்த
நெற்குவையும் ம னைக்கூரையும்   வேறுபாடறிய  வாராக  படிமறுக்கஞ்
செய்யுமென வுரைப்பினுமமையும். அவ்வகையில், மிசை நெற்குவை யென
இயைத்து மேலே நெல்லைக் குவித்தலாலென வுரைக்க. கறி முடையும்
கடற்கரையும் தம்மில் ஒத்துக் காண்பார் காட்சியைக் கலக்கும் என்றற்குக்
“கறி மூடையாற் கரைக் கலக்குறுந்து” என்றார். மூடைகளை ஏற்றலும்
இறக்குதலும் செய்தலால் ஆரவாரம், உண்மை யுணர்க. பொன்னாகிய
பொருள் பரிசமாயிற்று. தாரம் - பண்டங்கள். ஈண்டுக் குட்டுவனென்றது,
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனை யென்றறிக. கடல் முழங்கு முழவின்
முசிறியென இயைத்துக் கடல்போல் முழங்கும் மழவினைுடைய முசிறி
யெனினுமாம். புரைதல், உயர்தலும் ஒத்தலுமாம் வாய்ப்பட - விழயுண்டாக.
பருந்துயிர்த்துச் சேக்கும் என்பதைப் பருந்து தங்கி உயிர்க்குமெனக்
கொள்ளினுமமையும். உயிர்த்தல், இளைப்பாறுதல். உழிஞைப்போர் நிகழ்தல்
ஒருதலையென்பார் “ஏணி வருந்தின்று கொல்” என்றார். அரண் கோடற்குச்
சார்த்திய ஏணி அசைவின்றி நிலை பெறத் தாங்குதல்பற்றி “இறுத்த ஏணி”
யெனல் வேண்டிற்று. மறவர் பலரும் ஏறிப் பொருதலின், விரைவுதோன்ற
“வருந்தின்று கொல்லோ” என இறந்த காலத்தாற் கூறினார், மறுக்கும்,
கலக்கும், சேர்க்கும் முசிறி, குட்டுவன் முசிறி, முழவின் முசிறியென இயையும்;
ஈயும் குட்டுவன் என முடிக்க. கொடுப்பினும், தந்தையும் கொடான். ஊர்க்கண்
வந்தோர். இறுத்த ஏணி வருந்தின்று கொல்லோ எனக் கூட்டி வினை முடிவு
செய்க. ஏணியை எல்லையாக்கி ஏணிக்கும் ஊர்க்கும் இடையிலுள்ள நிலம்
வருந்தின் றென்றுரைப்பினுமாம்.

     விளக்கம்: மகட்கொடை நேர்தற்பொருட்டு நலமெல்லாம் நிறைந்த
விழுமிய பொருளைக் கொடுப்பினும் இவள் தந்தை கொடான் என்பது
கூறவந்த ஆசிரியர், “நலஞ்சால் விழுப்பொருள்” பெறலாகும் இடம் இஃது
என்பார், குட்டுவனது முசிறி நகரை விதந்து விரித் துரைத்தார். மீன் விற்போர்
ஈட்டிய நெல்லும், மனையவர் தொகுத்துக் கலத்திலேற்றி வெளிநாடுகட்கு
விடுதற்குக் கடற்கரையில் தொகுத்த கறி மூடையும், வெளிநாடுகளிலிருந்து
கலங்களில் வந்து கரையிற் றொகுக்கப்பட்ட பொன்னும் முசிறி நகரின்
நலஞ்சால் விழுப்பொருள் உடைமையை விளக்குகின்றன. கடலில் நிற்கும்
கலத்திலிருந்து பொற்பரிசம் கழித் தோணியால் கரைபேரும் என்றாராயினும்,
கழியாய் ஆண்டுப் பயன்பட்டது கள்ளியாறு எனக் கொள்க. “சேரலர்,
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர்தந்த வினைமாணன் கலம்,
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” (அகம். 149)
எனப்பிறரும் கூறுவது காண்க. குட்டநாடு மலை வளமும் கடல் வளமுமாகிய
இரண்டுமே யுடையதாகலின், குட்டுவன், தன்பால் வருவோர்க்கு “மலைத்
தாரமும் கடற்றாரமும் தலைப்பெய்து” நல்குவன் என்றார். விழுப்பொருள்
கொடுப்போன் “பணிந்து வந்து” கொடுத்தல் வேண்டாவாயினும், அப்
பொருளினும் சிறந்தவள் “மகள்” என்பது தேர்ந்தமையும், விழுப்பொருளோடு
பணிவு தோற்று விப்பின், தந்தை மகட்கொடைக்கு உடன்படவன்
எனவுணர்ந்தமையும் தெரிய நின்றன. “நெடுநல்லூர்” என்று சிறப்பித்தது,
அதற்கு உளதாக இருக்கும் கேட்டினை நினைந்தெனக் கொள்க.