344. அண்டர் நடுங்கல்லினார் இவர் பெயர் அடை நெடுங்கல்லினாரென்றும், அண்டர் நடுங்கல்லியார் அடை நெடுங் கல்லியாரென்றும் காணப்படுகிறது. இப் பாட்டு இடையிற் சில அடிகள் சிதைந்துள்ளது. அதனால் பொருள் முடிவு தெளிய விளங்கலில்லை. திணையும் துறையும் முன்னைப் பாட்டுக்களி்லுள்ளனவே என்பதனால், மகட்கொடை பற்றியது இப்பாட்டு என்று அறியலாம். கொடை நேர்ந்தவழி மகளைப்பெற்ற தந்தை மிக்க பொருளும் மருத நிலத்தூர்களும் தரப்பெறுவனென்பதும், நேராது மறுத்தவழிப் போர்தோன்றி ஊரை யழிக்கு மென்பதும் உணரப்படுகின்றது. | செந்நெ லுண்ட பைந்தோட்டு மஞ்ஞை செறிவளை மகளி ரோப்பலிற் பறந்தெழுந்து துறைநணி மருதத் திறுக்கு மூரொடு நிறைகால் விழுப்பொரு டருத லொன்றோ | 5. | புகைபடு கூரெரி பரப்பிப் பகைசெய்து | | பண்பி லாண்மை தருத லொன்றோ இரண்டினு ளொன்றா காமையோ வரிதே காஞ்சிப் பணி மறி யாரங் கண்ணி... கணிமே வந்தவா ளல்குலவ் வரியே. |
திணையும் துறையு மவை. அண்டர் நடுங்கல்லினார் பாடியது.
உரை: செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை - செந்நெற்கதிர் களை யுண்ட பசிய சிறகையுடைய மயில்; செறிவளை மகளிர் ஒப்பலின் - செறிந்த வளையணிந்த இளமகளிர் ஒட்டுவதால்; பறந்தெழுந்து - பறந்து சென்று; துறைநணி மருதத்து இறுக்கும் ஊ ரொடு - துறைக்கணித்தாக நிற்கும் மருதமரத்தில் தங்கும் ஊர்களுடனே; நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்று - நிறையமைந்த விழுமிய பொருள்களைக்கொணர்ந்து தருவது ஒன்று, பகைசெய்து புகைபடு கூர் எரி பரப்பி - பகைமை மேற் கொண்டு புகையெழும் மிக்க தீயானது ஊர்களிற் பரந்தெரியக் கொழுவி; பண்பில் ஆண்மை தருதல் ஒன்று - அருட் பண்பில்லாத மறச் செயல் செய்வது ஒன்று; இரண்டனுள் ஒன்றாகாமை அரிது - இவ்விரண்டினுள் ஒன்று உளதாதல் ஒருதலை; காஞ்சிப் பனிமுறி ஆரம் கண்ணி - காஞ்சியினது குளிர்ந்த தளிருடனே - ஆத்திப்பூவை விரவித் தொடுத்த கண்ணி .... கணி மேவந்தவள் - வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளுடைய; அல்குல் அவ்வரி - அல்குலிடத்தே பரந்த அழகிய வரிகள்; எ - று.
இப் பாட்டில் சில அடிகள் சிதைந்து போனமையின் பிற்பகுதியின் பொருணிலை விளங்கவில்லை. செறிவளை மகளிரெனவே இளையவ ரென்பது பெறுதம். நீர்த்துறைத் கணிமையில் மருதம், நிற்கும் துறைநணி |