| களிறணைப்பக கலங்கின, காஅ கேரோடத் துகள்கெழுமின, தெருஅ மாமறுகலின் மயக்குற்றன, வழி கலங்கழா அலிற், றுறை கலக்குற்றன |
5. | தெறன்மறவ ரிறைகூர்தலிற் |
| பொறைமலிந்து நிலனெளிய வந்தோர் பலரே வம்ப வேந்தர் பிடியுயிர்ப் பன்ன கைகவரிரும்பின் ஒவுற் ழிரும்புறங் காவல் கண்ணிக் |
10. | கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை |
| மைய னோக்கிற் றையலை நயந்தோர் அளியர் தாமேயிவ டன்னை மாரே செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் |
15. | கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் |
| குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினு மன்னோ என்னா வதுகொ றானே |
20. | பன்னல் வேலியிப் பணைநல் லூரே. |