பக்கம் எண் :

302

     

மகட்கொடை வேண்டி நின்றனர். அவள் தந்தையோ அவர்களை மறுத்தான்.
அவர் தானை பண்ணிப் போர்க்குச் சமைந்தனர். அது கண் மதுரைப்
படைமங்க மன்னியார், அப் போர் வினையால் ஊரெய்தும் கேடு நினைத்து
வருந்தி இப் பாட்டைப் பாடியுள்ளார்.

 படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்
கொடுநுடங்கு மிசைய தேரு மாவும்
படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
கடல்கண் டன்ன கண்ணகன் றானை
 5.வென்றெறி முரசின் வேந்த ரென்றும்
 வண்கை யெயினன் வாகை யன்ன
இவணலந் தாரா தமைகுவ ரல்லர்
என்னா வதுகொறானே தெண்ணீர்ப்
பொய்க் மேய்ந்த செவ்வரி நாரை
 10.தேங்கொண் மருதிண் பூஞ்சினை முனையிற்
 காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.

     திணையும் துறையு மவை: மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

     உரை: படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் - ஒலிக்கின்ற
மணி கட்டபட்ட பக்கத்தையுடைய பருத்த காலையுடைய யானைகளும்;
கொடி நுடங்கும் மிசைய தேரும் மாவும் - கொடி நின்றசையும் உச்சியை
யுடைய தேர்களும் குதிரைகளும்; படை அமை மறவரொடு துவன்றி -
படைக்கலமேந்திப் போர்க்கமைந்த வீரருடனே நெருங்கி; கல்லெனக் கடல்
கண்டன்ன - கல்லென்னும் முழக்கத்தோடே கூடிய கடலைக் கண்டாற்
போன்ற; கண்ணகன் தானை - இடமகன்ற தானையையுடைய; வென்றெறி
முரசின் வேந்தர் - வென்றெறிந்த முரசினையுடைய அரசர்; என்றும் -
எப்போதும்; வண்கை எயினன் வாகை யன்ன - வள்ளன்மையுடையனாகிய
எயினன் என்பானுக்குரிய வாகை யென்னும் நகரத்தைப் போன்ற; இவள்
நலம் -இவள் பெண்மை நலத்தை; தாராது - தந்தையானவன் மணஞ்செய்து
தாரா தொழியின்;அமைகுவ ரல்லா - வறிது அமைந்து மீளார்; தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை - தெளிந்த நீரையுடைய பொய்கையின்
மீனன மேய்ந்த செவ்வரி நாரை - தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனை
மேய்ந்த செல்வரி நாரைகள்; தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின் -
தேன் பொருந்திய மருதமரத்தின் பூவொடு கூடிய கிளைகளில் தங்குதலை
வெறுப்பின்;காமரு காஞ்சி துஞ்சும் - அழகிய காஞ்சிமரத்தின்கண் உறங்கும்;
ஏமம் சால் சிறப்பின் இப்பணை நல்லூர் - காப்பமைந்த சிறப்பினையுடைய
நல்செய் வயல் வளம் நிறைந்த இந்தவூர்; என்னாவது கொல் -
என்னவாகுமோ, தெரிந்திலதே; எ - று.