| வேந்தர் பலராதலின், அவர் தானைகளும் பலவாயின; ஆதலால் கடல் கண்டன்ன தானை என்ப பன்மைவினையான் முடித்தார். கடல் கண்டன்ன தானையையுடைய வேந்தர் அமைகுவரல்லர்; நல் லூர் என்னாவது பொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பொருள் வளம் குன்றிப் பெருவறம் உண்டாகியபோதும் தன் வண்மையில் எயினன் குன்று வதிலன் என்பார், என்றும் வண்கை யெயினன் என்றார். தாரானாயின் என்பது தாராது என நின்றது. தருதற்குரிய வினைமுதலாகிய தந்தை வருவிக்கப்பட்டது. செவ்வரி நாரை நாரையினத்துள் ஒன்று; நந்து நாரையொடு செவ்வரி யுகளும் (பதிற். 23) என்று சான்றோர் கூறுவது காண்க. ஏமஞ்சால் சிறப்பு - இன்பம் அமைந்த வாழ்க்கையுமாம்.
விளக்கம்: மிசைய தேர், மிசையென்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சக் குறிப்பு தேரென்னும் பெயர் கொண்டது. நால்வகைப் படையுள் யானைப்படை சிறப்புடையதென்பது பற்றி அதனை யெடுத் தோதினார். துவன்றியென்னும் வினையெச்சம் அன்னவென்னும் வினைக் குறிப்புக் கொண்டது. வாகை, எயினைுக்குரிய வூர். வாகைப் பறந் தலை, வாகைப் பெருந்துறை என்பவற்றின் வேறு: இவ் வாகைக்குரிய எயினன், ஏனை ஆய் எயினனின் வேறாவான். இந்த வாகை மதுரை நாட்டில் உள்ள நாளிற் சிறப்பெய்திருந்தது. படை மங்க மன்னியாரது ஊரும் இவ்வாகையாகலாம். தாராதமைகுவரல்லரென ஒரு தொடராகக் கொண்டு கொள்ளா தொழியார் என்றலு மொன்று.நாரை பூஞ்சினை முனையின் காஞ்சிக் சினையிற் றுஞ்சும் சிறப்பினை யுடைய நல்லூரென வேண்டாது கூறியது. மகண் மறுத்தவழி நிகழும் போரால் அவ்வூர் பாழ்படுவது குறித்து இரங்கிக் கூறியது. இக்கருத்தே பற்றி என்னாவது கொல் என்றார். படையமை மறவர் என்பதற்குப் பழைய வுரைகாரர். படைக்கலத் தொழிலமைந்த வீரர் (புறம். 72 உரை) என்ற உரைப்பர். நிறைவுடைய தானைக்கு யானை முதலிய நான்கும் நிரலே நன்கமைவது சிறப்பு: நெடுநல் யானையுந்தேரு மாவும்; படையமை மறவரும் உடையம் (புறம். 72) என்று பிறரும் கூறவது காண்க. 352. பரணர் மகட்கொடை வேண்டிய வேந்தன் தந்தைக்கு மிக்க செவ்வந் தருவதாக வுரைத்தானாக, நெடுந்தகையாகிய தந்தை மறுத்தலே பொருளாகக் கொண்டான்; கொடைக்குரிய மகளும் பெண்மை கனிந்து சுண்ஙகு பரந்த மார்புடனே கதிர்த்து விளங்கினாள்; இவள் தன்னையர் தாமும் போர்வெறி கொண்டு நின்றனர். இதனைக் கண்ட ஆசிரியர் பாணர் இப் பாட்டினைப் பாடியுள்ளார். உறையூரில் வாழ்ந்த தித்தன் என்ற வண்மையோன்பால் பரணர்க்குப் பேரன் புண்டு. இப் பாட்டுப் பெரிதும் சிதைந்திருத்தலின் பொருண் முடிவு இனிது விளங்கவில்லை. | தேஎங்கொண்ட வெண்மண்டையான் வீங்குமுலை.............கறக்குந்து அவல்வகுத்த பசுங்குடையாற் புதன்முல்லைப் பூப்பறிக்குந்து | |