5. | ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் | | குன்றேறிப் புனற்பாயிற் புறவாயாற் புனல்வரையுந்து............. .............நொடைநறவின் மாவண் டித்தன் வெண்ணெல் வேலி | 10. | உறந்தை யன்ன வுரைசா னன்கலம் | | கொடுப்பவுங் கொளாஅ னெடுந்தகை யிவளே விரிசினைத் துணர்ந்த நாகிள வேங்கையிற் கதிர்த்தொளி திகழு நுண்பல் சுணங்கின் மாக்கண் மலர்ந்த மலைய டன்னையும் | 15. | சிறுகொ லுளையும் புரவியொடு.......... | | ................யாரே. |
திணையும் துறையு மவை. பரணர் பாடியது.
உரை: தேஎங்கொண்ட வெண் மண்டையான் - கள் நிரம் பக்கொண்ட வெள்ளிய மண்டையின்கண்; வீங்கு முலை ... கறக்குந்து - பருத்த மடியில் ...கறக்கும்; அவல் வகுத்த பசுங்குடையால் - பள்ளமுண்டாகச் செய்யப்பட்ட பசிய ஓலைக் குடையில்; புதல் முல்லைப் பூப்பறிக்குந்து - புதவிடத்தே மலர்ந்த முல்லைப்பூக்களைப் பறிக்கும்;ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் - ஆம்பலின் தண்டால செய்யப்பட்ட வளையணிந்த கையையுடைய மகளிர்; குன்றேறிப் புனல் பாயின் - மணற்குன்றின் மேலேறி நீர் நிலையில் விளையாடப் பாய்வாராயின்; புற வாயால் புனல்வரையுந்து - புறத்தே நீர் செ்ல்லுதற்குரிய கோடியில் வழிந்து நீங்கும்; ......... நொடை நறவின் ............ விலைப் பொருட்டாகிய கள்ளினையுடைய; மாவண் தித்தன் - பெரிய வண்மையையுடைய தித்தனது; வெண்ணெல் வேலி உறந்தை யன்ன - வெண்ணெல் வயல்கள் வேலியாகச் சூழ்ந்துள்ள உறையூரைப்போல;உரைசால் நன் கலங் கொடுப்பவும் - புகழ் நிறைந்த நன்கலங்கள் பவவற்றைக் கொடுக்கவும்; நெடுந்தகை கொளா அன் நெடிய தகைமையினையுடைய தந்தை அவற்றைக் கொள்ளானாயினான்; இவள் - இம் மகள் தானும்; விரி சினைத் துணர்ந்த நாகிள வேங்கையின் - விரிந்த கிளையிடத்துக் கொத்துக் கொத்தாகப் பூத்துள்ள இளைய வேங்கை மரத்தினைப்போல; கதிர்த்து ஒளி திகழும் - கதிர்விட்டு ஒளி செய்யும்; நுண் பல் சுணங் கின் நுண்ணிய பலவாகிய சுணங்கு பரந்த; மாக்கண் மலர்ந்த முலையள் - கரிய கண் தோன்றிய முலையையுடையளாயினாள்; தன்னையும் - தமையனும்; சிறுகோல் உளையும் புரவியொடு - சிறு கோலுக்கு வருந்தும் குதிரைகளுடன்; .........யாரே........யாவர்; எ - று. |