பக்கம் எண் :

305

     

     மண்டை, கள் முதலியன வுண்டற்குரிய மட்கலம். மனையோலை யால்
உட்குடைவாகச் செய்யப்டுவதுபற்றி, “அவல் வகுத்த பசுங்குடை” என்றார்.
கொடிமுல்லை யன்மை தோன்ற, “புதல் முல்லை” யெனப்பட்டது. இதனைத்
தளவுமுல்லை யென்பர். நீர்நிலைகளில் மிக்கு அதனைப் “புறவாய்” என்றார்;
மதகென்றுமாம். உறையூர், உறந்தையென வருவது மரூஉ; “நொச்சி வேலித்
தித்தன் உறந்தை” (அகம். 122) என வருதல் காண்க. வள்ளி - வளை.

     விளக்கம்: இப் பாட்டு இடையிடையே சிதைந்தள்ளது. சிதைந்த
வற்றுள் சிற்சில் சொற்களே கிடைத்துள்ளன. பழைய தமிழ்ச் செல்வர்
மனைகளில் அழிந்தனபோக ஒழிந்த ஏடுகளைக் காணும் வாய்ப்பு நேரில்
சிதைந்தவை  கிடைப்பினுங்கிடைக்கும்.   இதன்கண்   அடிகள்   சில
சிதைந்திருத்தலின் வினைமுடிபு காண்பது இயலவில்லை. தேஎம், தேன்,
தேன் கோடற்குரிய வெண்மண்டையில் ஆவின்பால் கறக்கப்படும் போலும்.
பனையோலை, தெங்கிண் ஓலை யென்றிவற்றால் உட்குடைவாகச் செய்யப்
பட்டவை பசுங்குடை யெனப்பட்டன. அவற்றை உணவுண்டற்குப்
பயன்படுத்துவது பண்டையோர் முறையெனினும், ஈண்டு அது முல்லைப்
பூப்பறித்தற்குப் பயன்படு்கிறது. குன்று, மணலாலாகிய செய்குன்று.
மணற்குன்றேறி நீரிற் பாய்ந்து விளையாட்டயர்தல் பண்டைநாளை இளையர்
விளையாட்டு.குன்றேறிப் பாய்தலால் நீர்நிலையிலுள்ள நீர் அலைந்து புறத்தே
நீர் செல்லும் வாய் வழியாக வழிந்தோடும் என்பார், “குன்றேறிப் புனல்
பாயின் புறவாயாற் புனல் வரையுந்து” என்றார். உறந்தை, உறையூரின் மரூஉ:
பொறையாறு புறந்தையென வருதல்போல. உறையூர் சோழராட்சிக்கு வருமுன்
தித்தன் முதலிய செல்வர் பாதுகாப்பிலிருந்தமையின், தித்தன் ........ உறத்தை
யென்றார். உறந்தையன்ன உரைசால் நன்கலன் என்றது, உறந்தைநகர் புலவர்
பாடும் புகழ் படைத்ததாகலின், அப் புகழுடைமை வெறிப்பட, “உரைசால்
நன்கல்” யென் விதந்து கூறினார். கொள்ளாமைக்கேது த்ந்தைபாலுள்ள
நெடுந்தகைமை யென்பார், “உறந்தை யன்ன உரைசால் கலம்” என்றார்.
நாகிள் வேங்கை, மிக்க இளமையையுடைய வேங்கை.

353. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

     வேந்தர்  குடித்தோன்றல்  ஒருவன்  இளமகளொருத்தியின்  மெய்ந்
நலங்கண்டு அவள்பால் தன் கருத்தைச் செலுத்தி அறிவழிந்து நின்றான்.
இடையில்   மேகலையும்  தலையிற்  பொற்கண்ணியும்  அணிந்து தன்
மனைப்பெய்ம் மணல் முற்றத்தில்இனிதிங்கிய அவளது இனிய காட்சி அவளை
மணந்துகொள்ள வேண்டுமென்ற வேட்கையை அவள் உள்ளத்தே எழுப்பிற்று.
அவன் தான் ஊர்ந்துவந்த தேரை ஒரு புடையில் நிறுத்திச் சான்றோராகிய
காவிரிப்பூம்பட்டினத்துக்   காரிக்கண்ணனாரைக்   கண்டு அவரைத் தன்
பொருட்டு மகட்பேசி வருமாறு தன் கண்ணாற் குறையிரந்து நின்றான்.
வெள்ளைப்பார்வையால் தன்னை நோக்கிய அவள் உள்ளக்குறிப்பையோரந்த
சான்றோர், “அண்ணால் இவள் யாவர் மகள் என்று வினவுகின்றாய்; இவள்
ஒரு தொல்குடி மன்னன் மகள்; மகட்கொடை வேண்டி முன்னால் வேந்தர்
பலர் வந்து கொடை மறுக்கப்பட்டுச் சென்றனர். அது காரணமாக நிகழ்ந்த
போரை வென்றியுண்டாத நடத்திய இவள் தமையன்மார் இன்னும் அப்
போர்ப் புண்ணாறாது புண்ணிடை வைத்த