பக்கம் எண் :

306

     பஞ்சியொடு விள்ஙகின்றனர். அவர் காண்பதற்கே அச்சம் தருபவராக
இருப்பர், கண்” என்று இப் பாட்டாற் கூறியுள்ளார்.

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொருஞ்செய் பல்கா சணிந்த வல்குல்
ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத்
தருமண லியல்வோள் சாய னோக்கித்
5.தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
 வினவ லானா வெல்போ ரண்ணல்
யார்மக ளென்போய் கூறக் கேளினிக்
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாட்கடா வழித்த நனந்தலைக் குப்பை
 10.வல்வி லிளையர்க் கல்குபத மாற்றத்
 தொல் குடி மன்னன் மகளே முன்னாட்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
...........................
செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்
 15.கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
 பஞ்சியுங் களையாப் புண்ணர்
அஞ்சுதக வுடையரிவ டன்னை மாரே.

      திணையும் துறையு மவை. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்
கண்ணனார் பாடியது.


      உரை: ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த - குற்றமில்லாத பொற்
கொல்லன் பழுதறச் செய்த; பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல் -
பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும்; ஈகைக் கண்ணி
இலங்கத்தைஇ - பொன்னாற் செய்த கண்ணியும் விளக்கமுற ஒப்பனை
செய்துகொண்டு; தருமணல் இயல்வோள் சாயல் நோக்கி - புதிது
கொணர்ந்து பரப்பப்பட்ட மணலின்கண் நடந்து செல்பவளுடைய சாயலை
நோக்கி; தவிர்த்த தேரை - செல்லாது நிறுத்திய தேரையுடையனாய்,
விளர்த்த கண்ணை வெளுத்த பார்வையினையுடையனாய்; வினவலானான
வெல்போர் அண்ணல் - கேட்டல் அமையாத வெல்லும் போரையுடைய
தலைவ; யார் மகள் என்போய் - இவள் யார் மகள் என்று கேட்கின்றாய்;
இனி கூறக் கேள் - இப்பொழுது யான் கூறக்கேட்பாயாக; குன்று கண்டன்ன
நிலைப் பல் போர்பு - மலையைக் கண்டாற்போன்ற நிலையினையுடைய பல
நெற்போர்களை; நாள் கடா அழித்த நனந்தலைக் குப்பை - நாட்காலையில்
அழித்துக் கடாவிடப்பட்ட இடத்திற் குவிந்த நெல்லை; வல்வில் இளையர்க்கு
அல்கு பதம் மாற்றா - விலய வில் வீரர்களுக்கு நாளுணவாக நல்குவதில்
மாறுதல் இல்லாத; தொல் குடி மன்னன் மகள் -