பக்கம் எண் :

307

     

பழைமையான குடிகள் நிறைந்த வூர்க்கு வேந்தன் மகளாவாள்; முன்னாளில்
மக்ட கொடை வேண்டி வந்த பெரிய முதிய வேந்தராகிய சான்றோர்க்கு -
செருவாய் உழக்கிக் குருதி யோட்டி - போர்க்களத்தில் பகைவரைக் கொன்று
அவர் குருதியையாறாக வோடச் செய்து; கதுவாய் போகிய - வாய்மடிந்து
வடுப்பட்ட; துதி வாய் எஃகமொடு - கூரிய வாயையுடைய வாளுட னே;
பஞ்சியும் களையாப் புண்ணர் - சீலை நீக்கப்படாத புண்ணையுடையராய்;
அஞ்சு தகவு உடையர் கண்டார் - அஞ்சத்தக்க தகுதிப்பாட்டினையுடையரா
யிரா நின்றார்; இவள் தன்னைமார் - இவளுடைய தமையன்மார்கள்; எ - று.


     தனக்குரிய தொழிலைக் குற்றமற வுணர்ந்த பொற்கொல்லனை “ஆசில்
கம்மியன்” என்றும், எனவே அவன் புனையும் பொற்பணி பழுதறவியன்றதா
மென்றற்கு “மாசறப்புனைந்த” என்றும் கூறினார். அல்குலிடத்தே பணியப்படும்
மேகலை, அல்குலெனப்பட்டது; “பால்காசு நிரைத்தசில்கா ழல்குல்” (முருகு. 16)
என்று சான்றோர் வழங்குவது காணக். தருமணல், புதிது கொணர்ந்து
பரப்பப்பட்டமணல். மகளது சாயல் வெல்போரண்ணலின் கண்ணைக் கவர்ந்து
குருத்தைப் பிணித்தலின், அவள் தேரை நிறுத்திக்கொண்டைமைதோன்ற,
“சாயல் நோக்கித் தவித்ததேரை” யென்றார். மலர்ந்தநோக்கமின்றி மையல்
நோக்கங்கோடலின், “விளர்த்த கண்ணை” யென்றார். மாற்றா-வழங்கு தலை
இல்லையென்று நீக்காத. போரிற் பட்டபுண் இன்னும் ஆறிற்றல் வென்றற்கு,
“பஞ்சியும் களையாப் புண்ணர்” என்றும், அதனால் அவர்
அஞ்சுதகவுடையரென்றும் குறித்தார்.

     விளக்கம்: இது  கட்பாற்காஞ்சியாதலின்,  மகளது  மாண்பும்
அவளைக்கோடற்கு விரும்புவோன் இயல்பும் கொடைக்குரியமரபினரான
தந்தைதன்னையர் இயல்பும் முறையே கூறலுற்ற ஆசிரியர்காரிக் கண்ணனார்
மகளது மாண்பை இயலும்  சாயலும் காட்டி  இன்புறுத்துகின்றார். அவள்
இடையில் அணிந்திருந்த மேகலை பல்காசு நிரையாகத் தொடுக்கப்பட்டுள
தென்றும், தலையிற்  சூடியிருந்த  பொற்கண்ணி  இனிது  விளங்கப்
புனையப்பட்டுளதென்றும் கூறலுற்று, மேகலையிலுள்ள காசுகள் கைத்திறன்
வல்ல கம்மியனால் செய்யப்பட்டவை யென்பாராய் “ஆசில் கம்மியன் மாசறப்
புனைந்த பொலஞ்செய் பல்காசு”என்றார்.இதனால் அவளது செல்வமிகுதியும்
சுட்டியவாறாயிற்று. புதுமணல் பரப்பிய முற்றத்தில் இடையிலும் தலையிலும்
மேகலையும் பொன்னங்கண்ணியும் பொற்புடன் திகழ அன்னத்தின் நடையும்
மயிலின்  சாயலும்கொண்டு  காட்சியளித்தமை  குறிப்பாராய், “தருமண
லியல்வோள் சாயல் நோக்கி” என்றார். தருமமொடியல் வோள் என்றும்
பாடமுண்டு; இளமைக்குரிய பண்பும் செயலும் கொண்டு இயல்வோளென்பது
அதற்குப் பொருள். பொருட்குரிய குணமும்செயலும் தருமனெமப்படும்.
இயல்கண்டு   செலவுதவிர்த்தச்   சாயல்கண்டு   கருத்திழந்தானாயினும்
மறமாண்புடையன் அம்மகள் வேட்டமைந்தன் என்பார், வெல்போரண்ணல்”
என்று   சிறப்பித்தார்.   இதனாற்   பய்ன,   கருதியது    முடிக்கும்
கட்டாண்மையுடையன் என்பது. கொடைக்குரிய மரபினையுடைய தந்தை
தொல்குடி மன்னன் என்றது, குடிநன்குடைமை சுட்டியவாறு. துதிவாய் எஃகம்,
கூரிய வாயையுடைய வேல்.