பக்கம் எண் :

309

     

    எஃகம்நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தை பெயர்க்கும்; மடந்தை
மடநோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல் எனக் கூட்டி வினைமுடிவு
செய்க. அரைசெனப் பொதுப்படக் கூறினமையின், உயர்ந்த முடிவேந்தர்
என்பது கொள்ளப்பட்டது. புரையோர், போர் வினையாற் புகழ் மேம்பட்ட
சான்றோர். சான்றோரை முன்னிட்டு மண்ணுமங்கலம் செய்து மரபு. போர்
தொடங்குமுன், மண்ணுமங்கலம்; வாண்மங்கலம் முதலியன செய்வது
பண்டையோர் போர்த்துறை இயல்பு. வயல், பொது; போறலின், வாயிலெனப்
பட்டதென்றுமாம். மடந்தையின் மடவியநோக்கு, ஊர்க்குப் பொலி வினைச்
செய்வதேயன்றிக் கேட்டினைச்செய்தற்கும் ஏதுவாயிற்றென நிற்றலின், உம்மை,
எச்சப்பொருட்டு, நாரைக்கு அடங்கா தோடும் வாளை, மகளிர் விளையாடும்
நீர்நிலைக்கண் கைப்பற்றப்படுவது  போல  முன்னாள்  பெருவேந்தர்கட்
கரியவளாயிருந்த   இம்   மடந்தை   ஊர்கவினிழப்பப்பிற    வேந்தர்
கைப்படுவள்போலும் என இறைச்சி தோன்றியவாறு காண்க.

     விளக்கம்: மகள்   மணத்திற்குரிய   செவ்வி   யெய்தினமையும்,
மகட்கொடை வேண்டி வேந்தர் வந்தமையும், கொள்ளற்குரிய நிரலுடைமை
அவர்பால் இன்மைகண்டு கொடைக்குரிய மரபின் தந்தை தன்னையர் மகண்
மறுத்தமையும், அதனாற் சினங்கொண்ட வேந்தர் போர்க்குச் சமைந்தமையும்
எடுத்தோதாராயினும்,தந்தை“புரையோர் சேர்ந்துவர நிரைகா ழெஃகம் நீரின்
மூழ்கப் பெயர்க்கும்”  என்றதனால்  பெறப்பட்டன.  அரைசு  தலைவரினும்
அவரைத் தாக்கி யெறியும் வகையால்  மேம்பட்டு  நிற்பதன்றி  அவர்க்கு
தலைவரினு மடங்கலானா” என்றார். இனி, மடங்கலானா என்று எஃகத்தின்
செயலாக்கி, தந்தையின் மடங்காத் தன்மையை அதன்மேலேற்றிக் கூறிதாகக்
கொள்ளினும்  அமையும்.  மடந்தையின்  மடநோக்கம்  மான்பிணையது
போலமருண்ட நோக்கமாயினும் காண்பார்க்கு மகிழ்வை விளைக்கும் என்பார்
“மடந்தைமான்பினை யன்ன மகிழ்மட நோக்கம்” என்றும், எனவே இத்தைகய
நோக்கம் இவ்வூரவர்க்கு இன்பத்தைச் செய்வதோடு, நிகழவிருக்கும் போரால்
துன்பத்தையும் விளைவிக்கின்றதே. இஃதென்னை யென்றற்கு “ஊர்கவின்
இழப்பவும்   வருவது    கொல்லோ”    என்றார்.   ஊர்க்கு   அரணும்
ஆக்கமுமாதற்குரிய நோக்கம் கவின் இழப்பவும் வருமோ என்று
கொள்ளுமிடத்து, உம்மை எதிர்மறையுமாம்.

355. கடுமான் கிள்ளி

     இப் பட்டுச்   சிதைந்து   பாடினோராதல்   பாடப்பட்டோராதல்
இன்னாரென்றறியவாராதபடிள்ளது. இதன் இறுதியில்,  அச்சுப்படியினும்
கையெழுத்துப்படியில் இரண்டடிகள் மிகுதியாகக் காணப்படினும் பொருண்
முடிவு காட்டும் அடிகள் காணப்படவில் லை. கிடைத்தவற்றின் இறுதியில்
கடுமான்கிள்ளி யென்ற பெயர் காணப்ப்டடமையின், அஃது ஈண்டுக்
குறிக்கப்பட்டது. இதுவும் மகண் மறுத்தல் காரணமாக நிகழ விருக்கும் போர்
குறித்து ஒரு சான்றோராற் பாடப் பெற்றுளதென்பது தெளிவு. இடைக்காலத்
தமிழ் நன்மக்கள் தங்கள் பெறலரும் தமிழிலக்கியப்