பெருஞ் செல்வத்தைப் புறக்ணித்துச் சீரழிந்ததற்கு இதுவுமோர் எடுத்துக் காட்டாக இலங்குகிறது. | மதிலு ஞாயி லின்றே கிடங்கும் நீஇ ரின்மையிற் கன்றுமேய்ந் துகளும் ஊரது நிலைமைமயு மிதுவே மற்றே எண்ணா மையலன் றந்தை தன்னையர் | 5. | கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி | | ............... |
திணையும் துறையு மவை...............
உரை:மதிலும் ஞாயில் இன்று - இவ்வூர் மதிலுக்கும் அதன் உறுப்பாகிய ஞாயில் இல்லை; கிடங்கும் நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் - அகழியிலும் நீரில்லாமையால் கன்றுகள் மேய்ந்து திரியும், ஊரது காப்புநிலை இத்தமையாகவுளது; தந்தை எண்ணா மையலன் - இம் மகளுடைய தந்தையும் இதனை யெண்ணாமைக் கேதுவாகிய மயக்கத்தையுடையன்; தன்னையர் - இவளுடைய தமையன்மார்; கண்ணார் கண்ணிக்கடுமான கிள்ளி - கண்ணுக்கு அழகுநிறைந்த ஆத்திமாலையும் விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய கிள்ளி;.......... எ - று.
மதிலுக்கு ஞாயிலும் அகழிக்கு அரணும் வலிதருவனவாகலின் அவை அரணாகாமையான் இவ்வூர் பகைவர் கைப்பட்டழிவது ஒரு தலை யென்பார், ஊரது நிலைமையு மிதுவே என்றார். தந்தை, இடத்தின் வலியின்மை நோக்கி மகட்கொடை நேராமையான், எண்ணாமையல் னானான். 356. கதையங் கண்ணனார் இக் கண்ணனார் கதையன் என்பாருடைய மகனாவர். கதையன் என்பவர் பெயரால் கதையன்குடி யென்றோர் ஊரும் பாண்டிய நாட்டில் உண்டு. அதுவே பின்பு கதவங்குடி யென மருவித் திருத்தியூர் முட்டத்துக் கதவங்குடி (A. R. No. 183 of 1935-36) எனத் திருப்புத்தூர்க் கல்வெட்டுக்களில் வழங்குகிறது. கண்ணாரென்ற பெயருடைய சான்றோர் பலர் உளராதலின், அவரின் வேறுபடுத்த இவர் கதையங் கண்ணனார் எனப்பட்டனர். இவரைத் தாயங் கண்ணனாரெனக் கொண்டு, இப்பாட்டை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாட்டாகத் தொகுப்பாருமுளர். ஏடுகளில் கதையங் கண்ணாரென்பதே காணப்படுகிறது. முதுகாட்டின் முதுமைப்பகுதியை மிகுத்துரைக்கும் துறையில் இவர் பாடியுள்ள இப் பாட்டு கற்றோர்க்குப் பெருஞ்சுவை நல்கும் சிறப்புடையது. சுடுகாட்டைப் பொருளாகக் கொண்டு உயிர்வாழ்க்கையின் நிலையா இயல்பைக் கூறக்கருதிய இச்சான்றோர், முதுகாடு கூகையும் பேய்மகளிரும் உறைதலால் காண்பார்க்கு அச்சம் தரும் தன்மையுடையது; இறந்தோர் தன்கண் வந்து எரிந்து சாம்பராக, அதனை அவர்பாற் காதலன்புடையார் சொரியும் |