பக்கம் எண் :

311

     

கண்ணீர் அவிக்கும்; ஆயினும், அஃது எல்லாருடைய முதுகையும்
காண்கின்றது; எத்தகைய மக்கட்கும் தானே முடிவிடமாய்த் தனி நின்று
விளங்குகிறது. இம் முது காட்டின் புறங்காண்போர் ஒருவரும் இலர். இக்
காடுதானும் தன் முதுகு காண்பாரை இதுகாறும் கண்டதில்லை. சுருங்கச்
சொல்லுமிடத்து, எல்லாமக்களும் வீய, தான்மட்டில் வீயாது நிற்கும்
வீறுடையது இ்ம் முதுாடென்ற கருத்தமைய இப் பாட்டைப் பாடியுள்ளார்.

 களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூவுங் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
 5. நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர்
 என்புபடு சுடலை வெண்ணீர் றவிப்ப
எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து
மன்பதைக் கெல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே.

     திணையும் துறையுமவை. கதையங் கண்ணனார் பாடியது.

     உரை: களரி பரந்து கள்ளி போகி - காடு படர்ந்து கள்ளி மிகுந்து;
பகலும் கூவும் கூகையொடு - பகற்காலத்தின்கண்ணும் கூவும் கூகைகளாலும்;
ஈம விளக்கின் - பிணஞ்சுடு தீயாகிய விளக்காலும்; பேழ்வாய் பேய்
மகளிரொடு - அகன்ற வாயையுடைய பேய்மகளிராலும்; இம் மஞ்சுபடு
முதுகாடு - இந்தப் புகை தவழும் சுடுகாடு; அஞ்சுவந் தன்று - காண்பார்க்கு
அச்சம் வரப்பண்ணுகிறது; நெஞ்சமா காதலர் அழுத கண்ணீர் - மனம்
விரும்பும் காதலர்கள் அழுதலால் ஒழுகும் கண்ணீர்; என்பு படு சுடலை
வெண்ணீறு அவிப்ப - எலுப்பு கிடக்கும் சுடலை கண்ணுள்ள சாம்பலை
யவிப்ப; எல்லாப் புறனும் தான் கண்டு - எல்லாரையும் தான் முதுகு கண்டு;
உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய் -உலகத்து மக்கட்டொகுதிக்
கெல்லாம் தானே தனி முடிவிடமாய்; தன் புறம் காண்போர்க் காண்பறியாது
- அம் மன்பதையுள் தன்னைப் புறங்காண வல்லவர்களை அம் முதுகாடு
தானும் கண்டதில்லை; எ - று.


     ஒடு, ஆனுருபின் பொருட்டு, முதுகாடு, பரந்து, போகி, கூகை யொடும்
பேய்மகளிரொடும் விளக்கினாலும் அஞ்சு வந்தன்று; கண்ணீர் அவிப்ப,
உலகத்துத் தானாய்க் காண்போர்க்க காண்பறியாது எனக் கூட்டி வினை
முடிவு செய்க. பேழ்வாய்ப்பேஎய் மகளிர் என இயைக்க. வெண்ணீறு,
நீறுபூத்த நெருப்புமாம். சுடலையீமத்திற் சுடப்படும் பிணமெல்லாம்,
ஈமப்பள்ளியில் பிணித்தின் முதுகு பொருந்தக் கிடத்துபவாதலின்,
“எல்லார்புறனுந் தான்” என்றும் எல்லாம் ஒடுங்குங் காலத்துத்
தானொன்றே ஒடுங்காது நிற்றலின் “மன்பதைக் கெல்லாந் தானாய்”
என்றும், எல்லா மக்களும் தன்கண்