பக்கம் எண் :

312

     

ஓடுங்கிவிடுதலின், தனது ஒடுக்க்ங் காணும் மக்கள் எவரும் இலரர்தலின்,
“தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே” என்றும் கூறினார்.

     விளக்கம்: இப் பாட்டு முதுகாட்டின் முதுமைக் கூற்றை மிகுத்துக்
கூறுதலின், முன்னைத் திணையும் மமையுமெனத் துறை வகுத்தோர்
“திணையுந் துறையு மவை” யென்றனர் போலும். ஆசிரியர் இளம்பூரணரும்
நச்சினார்க்கினியரும், இதனை “மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர்
செல்லச் செல்லாக் காடு வாழ்த்து” (தொல். புறத். 24) என்பதற்கு
எடுத்துக்காட்டாகக் கொள்வர். உலகத்துப் பலரும் சென்றாராகவும்
தான்மட்டில் செல்லாது முதுகாடு நிற்றற்குக் காரணம் இதுவென்பார்
ஆசிரியர், “மலர்தலை யுலகத்து மரபுநன் கறிய” என்றார். அம் மரபு,
இப்பாட்டால் இனிது விளக்கப்பட்டிருப்பது காணலாம். இனிப் புறப்பொருள்
வெண்பாமாலை யுரைகாரர், “பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல்,
கல்லெனவொலிக்கும் காடு வாழ்த்தின்று” (பு. வெ. மா.10?6) எனக் காடு
வாழ்த்தின் இயல்பு கூறி, இதற்குக் காட்டலுற்ற வெண்பாவில், இப்
புறப்பாட்டின் கருத்தையே யமைத்து, “இன்புறந் தான்காணு
மிவ்வுலகையில்வுலகில், தன்புறங்கண்டறிவார் தாமில்லை - அன்பின்,
அழுதார் கண்ணீர் விடுத்த வாறாடிக்கூகை, கழுதார்ந் திரவழங்குங் காடு”
எனக்கூறியிருப்பதும், இதன்கண் “காதலர் அழுத கண்ணீர் என்புபடு சுடலை
வெண்ணீறவிப்ப” என்ற கருத்து, அன்பின் அழுதார் விடுத்த கண்ணீராகிய
ஆறாடிக் கூகையும் குழுதும் வழங்கும் எனக் குறித்திருப்பதும் ஒப்பு
நோக்கத் தக்கனவாம். புறக்கொடை வழங்காத போர் வேந்தரெனப் பட்டார்
யாவரையும் முடிவில் புறங்கண்டு நிற்கும் பொற்புடைமை “எல்லார் புறனுந்
தான்கண்” டென்பதனாற் பெறவைத்தார்.

---

357. பிரமனார்

      இப் பிரமனாரைப்பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
பிரமனார் என்ற இவர் பெயர் இடைக்காலத்தும் மக்களுக்கு
வழங்கிற்றென்பது திருமழபாடிக்கல்வெட்டொன்று, “செம்பிய தரையகோன்
மகன் பிரமன்” (S. I. Ins. Vol. V. No.648) என்பதனால் விளங்குகிறது.
இவர் துறவின்கண் நின்று அறத்தை வலியுறுத்துவது மிக்க
இன்பந்தருவதொன்று. இப் பாட்டின்கண், இத் தமிழகம் சேர சோழ
பாண்டியார் மூவர்க்கும் பொதுமை கருதியது; மூவருள் ஒருவர், ஒவ்வொரு
காலத்தில் ஏனையிருவர்க்கும் அது பொதுவென்பதை மறுத்து, அவரது
நாட்டைத் தாம் கவர்ந்து தமது ஒரு மொழி வைத்தாண்டதுண்டு; ஆயினும்
அவ்வாறு பொதுமையின்றி ஆண்ட வேந்தரும் வாழ்நாள் கழிய இறந்தனர்;
அவர் ஈட்டிய செவ்வமும் அவர்க்குத் துணையாய்ச் சென்றதில்லை.
அவரவர் செய்யும் அறவினையே மேலுலகத்து இன்பவிளைவிற்கு வித்தாகும்;
இவ்வுலக வாழ்வாகிய கடலைக் கடந்து மேலுல மாகிய அக்கரை சேர்தற்கு
அறவினையே தெப்பமாய்த் துணை செய்யும்; அதனை விரைந்து செய்ம்மின்
என வற்புறுத்தி யுள்ளார்.

 குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண்
பொதுமை சுட்டிய மூவ ருலகமும்
பொதுமை யின்றி யாண்டிசி னோர்க்கும்