| | மாண்ட வன்றே யாண்டுக டுணையே | 5. | வைத்த தன்றே வெறுக்கை வித்தும் | | அறவினை யன்றே விழுத்துணை யத்துணைப் புணைகை விட்டோர்க் கரிதே துணையழத் தொக்குயிர் வௌவுங் காலை இக்கரை நின்றிவர்ந் துக்கரை கொளலே. |
திணை: அது. துறை: மறக்காஞ்சி; பெருங்காஞ்சியுமாம்; பிரமனார் பாடியது.
உரை: குன்றுதலை மணந்த மலை பிணித்து யாத்த மண் - குன்றுகளோடு கூடிய மலைகளைத் தன்பாற் பிணித்துக் கட்டி நிற்கும் மண்ணுலகத்தில்; பொதுமை சுட்டிய மூவருலகமும் - பொதுவெனக் கருதப்பட்ட மூவேந்தருடைய நாடு மூன்றையும்; பொதுமையின்றி ஆண்டிசினோர்க்கும் - பொதுவெனப் போற்றாது தமக்கே யுரியவெனக் கொண்டாண்ட வேந்தருக்கும்; ஆண்டுகள் மாண்டவன்றே - வாழ்நாட்கள் கழிந்தன; வெறுக்கை துணைவைத்ததன்று - அவர் ஈட்டித்தொகுத்து வைத்த செல்வமும் அவர் செல்லுயிர்க்குத் துணையானதில்லை; வித்தும் அறவினையன்றே விழுத்துணை - அவரவர் செய்யும் அறவினையே மறுமைத் துணையாய் இன்பம் தருவதாம்; துணை தொக்கு அழ - துணைவர்கள் தம்மிற் கூடி யழ; உயிர் வௌவுங்காலை - உயிர் கூற்றுவனாற் கவர்ந்து கொள்ளப்படும் காலத்தில்; இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளல் - இவ்வுலகினின்றும் உயர்ந்து வீட்டுலகைப் பெறுதற்கு; அத்துணை புணை - அறவினையாகிய துணையே தெப்பமாவது; கைவிட்டோர்க்கு அரிது - அத்துணையைக்கை விட்டவர்க்கு மேலுலகப்பேறு இல்லையாம்; எ - று.
பெருமலைகளின் முடியிலும் அடியிலும் சிறு சிறு குன்றுகள் நிற்பது பற்றி, குன்று தலை மணந்தமலை யென்றும், வானில் ஒரு பற்றுக் கோடு மின்றி நிலவுலகு தனித்துச் சுழலுமிடத்து மலையும் குன்றும் நீ்ங்காதவாறு பிணித்துக்கொடு நிற்றலின், பிணித்த யாத்த மண் என்றும் கூறினாரென்க. மூவர், சேர சோழ பாண்டியர். உலகம் சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். அகத். 5) என்றாற்போல, நாடென்பது பட நின்றது. இத்தமிழகம் மூவர்க்கும் பொது வென்மது நன்கு விளங்க. பொதுமை சுட்டிய மூவருலகமும் என்றார். வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல். செய் 78) என்று ஆசிரியர் கூறுவது காண்க. உடம்பு நீ்ங்குங்கால் உயிரோடு தொடராமையின், துணை வைத்தன்றே வெறுக்கை யென்றார் அன்றே யென்பதை அசைநிலையாக்கி, அறவினை செய்தற்கு வெறுக்கை துணையே யன்றி அறவினை போல உயிர்க்குத் துணையாவதில்லை யெனினுமமையும். இம்மைக்கண் வித்தாய் நின்று மறுமை வீடுபோற் றின்பங்களை விளைவித்தலின், வித்தும் அறவினை என்றார். விழுமிய வென்பவற்றுள் விழுமியது
|