பக்கம் எண் :

314

     

வீடுபேறாதலின்,  அதனைப்  பெறுதற்குத்  துணையாகும்   அறவினை
“விழுத்துணை” யெனப்பட்டது. துணையாதல் எங்ஙனம் என்பாரக்குப்
புணையாகிய உவமையின் வைத்து, “அத்துணைப்புணை” யென்றார்.
புணையென்தற்கேற்ப, இம்மையம்மைகள் “இக்கரை உக்கரை” எனப்
பட்டன.அக்கரை யெனின், அது மறுமையாகிய துறக்க வுலகாய் மீளவும்
பிறததற் கேதுவாகலின் அதனின் மேலதாகிய வீட்டுலகு என்றற்கு உக்கரை
யென்றார். ஆண்டிசினோர்க்கும் ஆண்டுகள் மாண்ட; வெறுக்கை வைத்த
தன்று; விழுத்துணை அறவினையே; அத்துணைப் புணை, கைவிட்டோர்க்கு
உக்கரைகொளல் அரிது எனக்கூடிய வினைமுடிவு செய்க.

     விளக்கம்: தமிழகம் சேர சோழ பாண்டியார் மூவர்க்கும் பொது
வென்பது பண்டையோர் கொள்கை. இவருள் யாவரேனும் ஒருவர்
பொதுமையின்றித் தாமே யாண்ட காலமு முண்டாதலின், “பொது மையின்றி
யாண்டிசினோர்க்கும்” என்றார், “போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது”
(புறம். 8) “பொழமையின்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்” (புறம். 186)
என வருதல் காண்க. வேந்தர் பொதுமையின்றித் தாமே யாண்ட காலத்தும்
சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லை மாறியது இல்லை; சோழன் பாண்டி
நாட்டைக் கொண்ட போதும், பாண்டியன் சோழ நாட்டைக் கொண்டு
போதும் பாண்டி நாட்டின் பெயரையோ சோழ நாட்டின் பெயரையோ
எல்லைகளையோ மாற்றியது கிடையாதென்பதை இடைக்காலப் பல்லவ சோழ
பாண்டியர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பிரமனாரென்ற பெயர்கொண்டு
இவரைப் பார்ப்பனரென்பது பொருந்தாதென்பது மேலே காட்டிய
கல்வெட்டால் விளக்கும்.

358. வான்மீகியார்

     வடமொழியில் இராமாணம்  எழுதிய  வான்மீகியார் வேறு, இவர்
வேறு தமிழ் நல்லிசைச் சான்றோராகிய  இவர்  வடமொழிப்  புலவரான
வான்மீகியாரது  நூலிற்  பேரீடுபாடு  கொண்டிருந்தத னாலோ, இவர்
தந்தையார்க்கு வடவான்மீகிபால் உண்டாகிய அன்பினாலோ இவர்க்கு
இப்பெயருண்டாயிற்றெனக் கொள்ளலாம். இனி, “இவர் பெயர் வான்மீகனா
ரெனவுங் வழங்கப்படுமென்பது ‘அறுவகைப்பட பார்ப்பனப்பக்கமும்’ (தொல்;
புறம்:20) என்பதன் உரைக்கணுள்ள வழக்காற் றெரிவது. வடமொழியில்
வல்லமுனிவர் பெயர்களைப் பண்டைத் தமிழாசிரியர் புணைந்து விளங்கினர்
என்பது செந்தமிழ்நாட்டு நல்லிசைப் புலவர் பொயர்கள் பல கொண்டு
தெரியலாம். இனி வட மொழிலுள்ள வான்மீகி முனிவர் வழியினர்
இவராவரென்று கருது வாருண்டு (தமிழ் வரலாறு. பக். 246) என்று திரு, ரா.
இராகவையங்கார் அவர்கள் கூறுவர். இதனால் இப் புறப்பாட்டாசிரியர்
காலத்தில் வடவர் கூட்டுறவு தமிழகத்தில் நன்கு பரவியிருந்ததென்பது தெளிய
விளங்குகிறது. இவர்க்கு மனையறத்தினும் துறவறம் சிறந்ததென்பது கருத்து.
அதனை வற்புறுத்தமாற்றால் இவ் வான்மீகியார் இப் பாட்டினைப்
பாடியுள்ளார். இதன்கண் உலகியல் எழுவர் தவைராக நிலவும் செயல்முறை
போல்வது; அதனால் அறிந்தோர் தவத்தைக் காதலித்து வையத்திற்
பற்றிவிட்டனர். திருமகள் பற்றுவிட்டோரை நீங்காள் விடாது பற்றிலே
யழுந்தியிருப்போரைத்