| 362. சிறுவெண்டேரையார் இச் சான்றோரைப்பற்றி ஒன்றும் தெரிந்திலது. கயமனாராற் பாடப்பெற்றதலைவனே இவரால் இப்பாட்டிற் பாடப்பட்டிருத்தலின், இவரும் கயமனாரும் ஒருகாலத்தவரென்று அறியலாம். அந்தணர்களே, எங்கள் தலைவன் கணங்கொண்ட தானையொடு சென்று பகைவரைத் தாக்குங் குரலைக் கேட்பீராக; அருளாகாமையின், இஃது நுங்கள் நான்மறைகளிற் குறிக்கப்படுவதன்று; புறத்துறையாகிய பொருளாதலால் ஒழுக்கங்கூறும் அறநூல்களில் குறிக்கப்படுவதுமன்று; பார்ப்பார்க்குத் தண்ணடை நல்கி, இரவரர்க்குச் சோறளித்துப் பரிசிலர்க்கு நன்கலம் வீசி, கல்லென்னும் சுற்றம் பெருகியவழித்தாம் சிறிய இடத்தில் ஒதுங்கி யிருந்தற்கஞ்சி, உயர்ந்தோருலகத்துப் போர்வடுவுற்று உடம்போடு செல்லும் பொருட்டேயாகும், என இப்பாட்டின்கண் போர் வேந்தரது போர் வேட்கையின் கருத்தை விளக்கியுள்ளார். | ஞாயிற் றன்ன வாய்மணி மிடைந்த மதியுற ழார மார்பிற் புரளப் பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப் பொழிலகம் பரந்த பெருஞ்செய் யாடவர் | 5. | செருப்புகன் றெடுக்கும் விசய வெண்கொடி | | அணங்குருத் தன்ன கணங்கொ டானைக் கூற்றத் தன்ன மாற்றரு முன்பிற் றாக்குரற்கேண்மி னந்த ணாளிர் நான்மறைக் குறித்தன் றருளா காமையின் | 10. | அறங்குறிக் தன்று பொருளா குதலின் | | மருடீர்ந்து மயக்கொரீஇக் கைபெய்தநீர் கடற்பரப்ப ஆமிருந்த வடைநல்கிச் ஆமிருந்த வடைநல்கிச் சோறு கொடுத்து மிகப்பெரிதும் | 15. | வீறுசா னன்கலம் வீசிநன்றும் | | சிறுவெள் ளென்பி னெடுவெண் களரின் வாய்வன் காக்கை கூகையொடு கூடிப் பகலுங் கூவு மிகலு ளாங்கட் காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொ | 20. | டில்லென் றில்வயிற் பெயர மெல்ல | | இடஞ்சிறி தொதுங்க லஞ்சி உடம்பொடுஞ் சென்மா ருயர்ந்தோர் நாட்டே. |
திணை: பொதுவியல்; துறை: பெருங்காஞ்சி. அவனைச் சிறு வெண்டேரையார் பாடியது. |