உரை: ஞாயிற் றன்ன ஆய்மணி மிடைந்த - ஞாயிறு போல் ஒளி திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்து; மதியுறழ் ஆரம் மார்பிற் புரள - பிறைமதிபோல வளைந்த மாலை மார்பிற் கிடந்தசைய; பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்ப - பலியூட்டப்பெற்ற முரசு பாசறைக்கண் ஒலிக்க; பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்- பெழிலிடங்களிற் பரந்து நின்ற பெரிய மறந்செயலைப் புரியும் வீரர்; செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி - போரை விரும்பி யுயர்த்திய வெற்றியை யுடைய வண்மையான கொடியேந்திய; அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை - வருத்தம் செய்யும் தெவ்ம் உருத்து வந்தாற்போன்ற கூட்டங்கொண்ட தானையிடத்தேயிருந்து; கூற்றத் தன்ன மாற்றா முன்பின்- கூற்றுவனைப்போல் விலக்குதற்கரிய வலியுடனே; தாக்குரல் கேண்மின் - பகைவரைத் தாக்குதற்குச் செய்யும் முழக்கத்தைக் கேட்பீராக; அந்தணாளிர் - அந்தணர்களே; அருளாகாமையின் நான்மறைக் குறித்தன்று - இஃது அருட்செயலன்மையால் நும் நான்மறைக்கண் குறிக்கப் படுவதன்று; பொருளாகுதலின் அறம் குறித்தன்று - புறத்துறையாகிய பொருள் குறித்தலின் ஒழுக்கம் கூறும் அறநூல்களிற் குறிக்கப்படுவதுமன்று; மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ - மருட்கையினின்றும் நீங்கி அம்மருள் காரணமாகத் தோன்றும் மயக்கத்தையும் போக்கி; கைபெத் நீர் கடலளவும் பரந்து செல்லுமாறு; ஆம் இருந்த அடை நல்கி -நீர்வளம் மிகுந்த மருத நிலத்தூர்களைக் கொடுத்தும்; மிகப் பெரியதும் சோறு கொடுத்து - பசித்து வரும் இரவலர்க்கு மிகுதியாகச் சோறளித்தும்; வீறுசால் நன்கலம் நன்றும் வீசி - பரிசிலர்க்குச் சிறப்பமைந்த நல்ல அணிகளைப் பெரிதும் பொடுத்தும்; சிறு வெள்ளென்பின் நெடுவெண்களரின் - சிறு சிறு வெள்ளிய எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தின் கண்; வல்வாய்க் காக்கை கூகையொடு கூடி- வலிய வாயையுடைய காக்கையும் கூகையும் கூடி; பகலும் கூவும் அகலுள் ஆங்கண் - பகற்போதிலும் கூவும் அகன்றவிடமமாகிய அவ்விடத்து; காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு - சுடுகாட்டுண்மை புலனாகாதபடி செறிந்த கல்லென்ற சுற்றத்தார் நிறைதலால்; மெல்ல - மெல்லென; இல்வயின் இல்லென்று பெயர இல்லிடத்தே - இனித் தமக்கு இடமில்லையென்று அதனின் நீங்கக் கருதியும்; இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி - நிலவுலகு சிறிதாகலால் இனிதியங்குதற்கியலாமைக்கு அஞ்சியும்; உயர்ந்தோர் நாட்டு உடம்பொடுஞ் சென்மார் - வீரத்தால் சிறந்த உயர்ந்தோர் உலகிற்குத் தம்முடம்போடே செல்லற்பொருட்டுப் பொருகின்றனர்; எ - று. |