| அந்தணாளிர், தானை தாக்குரல் கேண்மின் நான்மறைக் குறித்தன்று; அறம் குறித்தன்று; தீர்ந்து, ஒரீஇ, நல்கி, கொடுத்து, வீசி, அஞ்சி, உயர்ந்தோர் வருவித்துக் கூட்டி வினைமுடிவுசெய்க. மணி யொகிக்கும் ஞாயிறும், மாலைக்குப் பிறை மதியும் உவமம். போர்க்குச் செல்லும் வேந்தர், முதற்கண் முரசுக்குப் பிறை மதியும் உவமம். போர்க்குச் செல்லும் வேந்தர், முதற்கண் முரசுக்குப் பலியிடுவது மரபு; கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம், பெரும்பணைக் கொட்டிலுள் அரும்பலி யோச்சி (பெருங்.II, 2:29-30) என வருதல் காண்க. அணங்கு உருத்தன்ன என்பதற்குத் தெய்வம் வருத்துதற் பொருட்டு உருக்கொண்டாற்போன்ற என்றுரைப்பினுமமையும். தாக்கு குரல், தாக்குரல் என வந்தது; தழங்கு குரல் முரசமென்பது தழங்குரல் முரசம் என வந்தது; தழங்கு குரல் முரசமென்பது தழங்குரல் முரசம் என வருதல் போல. மிக்க வலியும் செல்வமும் இளமையுமாகிய அவற்றை நிலையுடைய வாகக் கருதிற் கடும்பற்றுள்ளம் கொள்ளச் செய்யுமாகலின், அதற்கேதுவாகிய மருட்சியும் மயக்கமும் தீர்ந்தாலன்றிப் பொருட் கொடையாற் புகழும் உயிர்க்கொடையாற்றுறக்க வின்பமும் எய்தாமைபற்றி, மருள் தீர்ந்து மயக் கொரீஇ என்றார். கல்லென்னும் சுற்றம் கூடி நிலையாமை யுணர்த்தும் சுடுகாட்டின் உண்மை நினையாதவாறு அறிவுக்கண்ணை மறைத்தலின், காடு கண் மறைத்த கல்லென் சுற்றம் என்றார். பேராண்மை யாலும் சிறந்த கைவண்மையாலும் உண்டாகும் புகழ் உலக முழுவதும் பரவப் பெற்றார்க்கு உறையுளாகிய உலகிடம் சிறிதாதலின், இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி யென்றும், போரிற் புண்பட்டுப் புகழுண்டாக வீழ்பவர், தம் புகழுடம்போடே துறக்கவுலகு புகுவரென்பதனால், உடம்பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே யென்றும் உரத்தார்; ஏனைச் சான்றோரும், நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு, வாராவுலகம் புகுத லொன்றோ (புறம். 341) என்பது காண்க. உயர்ந்தோர், துறக்கவுலகு சென்றுள்ள சான்றோர்.
விளக்கம்: மறவர் பலரும் போர் வேட்கை மிகக்கொண்டு நாளும் போரே விரும்பியும் அதற்கேற்ப மெய்வலி பெருக்கியும் ஒழுகுவது கண்ட அந்தணர், இவ் வேட்கைக்குக் காரணமறியுங் கருத்தினராய் வந்து நிற்ப, ஆசிரியர், அந்தணாளரே, ஆரம் மார்பிற் புரள, முரசம் பாசறைக்கண் சிலைப்த் தானைவீரர் மாற்றரும் முன்புடமே பகைவர் மேற் சென்று தாக்கும் முழக்கத்தைக் கேண்மின் என்று அவர்க்குப் போர்நிகழ்ச்சியைக் காட்டி மறவரது போர்வேட்கை மிகுதியைக் கண்ணெதிரே காண்பித்தார், கண்ட அந்தணாளருக்கு வியப்புப் பெரிதாயிற்று. ஆகவே, ஆசிரியர், இது நுங்கள் நான்மறையிலும் அறநூல்களிலும் காணப்படாது; இது பொருட்டுறை. நுமக்கு இது வேண்டாத தொன்று என்றும், பொருட்பேறு தன்னலங் குறித்தன்று; பார்ப்பாரையும் ஏனை இரவலரையும் உண்பித்தல் கருதியது என்பார், கை பெய்த நீர் கடல் பரப்ப, ஆம் இருந்த அடைநல்கிச் சோறு கொடுத்து மிகப்பெரிதும் வீறுசால் நன்கலம் வீசி என்றும் குறிப்பித்தார். இவ்வாறு இரப்போர் சுற்றமும் தம் புகழ்பரப்பி, மக்களும் ஒக்கலுமாதிய சுற்றம்சூழவாழ்வதால், நிலையாமையுணர்த்தும் முதுகாட்டுண்மை மறகை்கப்படுமாயினும், இப் போர்வேட்கை மிக்கு நிற்கும் சான்றோர் அதனால் மறைப்புண்ணாது நிறையாமை நிலவும் நெஞ்சினராய், இனித்தாம் உறையும் இல்லம் நிலைத்த இன்பந்தரும் நிலையமாகாதென விணர்ந்து அதனின் நீங்கும் கருத்தாலும், இந் நிலவுலகு முழுதும் தம் புகழ் |