| பரவி விழுங்கினமையின் இனி அது சென்று பரவுதற்கு இடந்தேடுங் கருத்தாலும் உயர்ந்தோர் உறையும் துறக்கவுலகு செல்லும் கருத் தினராயினர். அது போர்ப்புண்பட்டு வீழுமாற்றால் பெறக்கடவதாகலின், உடம்பொடுஞ் சென்மார் என்றும், அது குறித்துப் போர் வேட்கை மிகுவாராயினரென்றும் கூறினாராயிற்று. 363. ஐயாதிச் சிறுவெண்டேரையார் முன்பு கண்ட சிறுவெண்டேரையாரின் வேறுபடுத்த இவர் ஐயாதிச் சிறுவெண்டேரையாரெனப்படுகின்றனர். ஐயாதி யென்பது இரவதூர். இநத் ஐயாதி யென்பதுவே இடைக்காலத்தே ஐயாறாயிற்றோவென வெண்ணுதற்கும் இடந்தருகின்றது. தொண்டை நாட்டிற் சலவாறு என்ற மூர் சலவாதியென வழங்குவது காண்க, தேரையார் என்னும் பெயர் பிற்காலத்தும் வழக்கிலிருந்துளது. தேரையார் என்றொரு சான்றோர், பதார்த்தகுண சிந்தாமணி யென்னும் நூலை ழெுதியுள்ளார். ஆதி யென்னும் பெயரால், ஆதியூர் (A. R. No. 778 of 1933) என்றும், ஆதிகுடி (A. R. No. 05 of 1920) என்றும் ஊர்கள் பல இருந்திருக்கின்றன. இவரும் வேந்தனை நோக்கி, இந்நிலவுலகில் உடை வேல் மரத்தின் சிறிய இலையளவு இடமும் பிறர்க்கின்றித் தாமே யாண்ட வேந்தர் பலர் இருந்தனர். முடிவில் தம் நாட்டைப் பிறர் கொள்ள, அவர் இறந்தனர்; அதனால் இறவாது நின்றோர் ஒருவ ருமில்லை; இறத்தல் உண்மை; பொய்யன்று; இன்னா நாளாகிய இறக்கும் நாள் வருமுன்னே நீ இவ்வுலகியலைத் துறந்து நினக்குரிய நல்வினையாகிய தவத்தைச் செய்வாயாக என இப்பாட்டின்கண் அறிவுறுத்தியுள்ளார். | இருங்கட் லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் | 5. | காடுபதி ாகப் போகித் தத்தம் | | நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற வுயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே | 10. | கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு | | வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று | 15. | நிலங்கல னாக விலங்குபலி மிசையும் | | இன்னா வைகல் வாரா முன்னே | |