பக்கம் எண் :

330

     
 செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பா முழுதுடன் றுறந்தே.

     திணையயும் துறையு மவை...ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.

     உரை: இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம் - கரிய கடல்
சூழ்ந்த இப் பெரிய இடத்தையுடைய நிலவுலகத்தை; நடுவணதுஉ டைஇலை
இடை பிறர்க்கு இன்றி - நடுவே உடை வேலமரத்தின் இலையளவாகிய
இடமும் பிறர்க்கு இல்லையாக; தாமே ஆண்ட ஏமம் காவலர் - தாமே
தமக்குரியதாக முழுதுமாண்ட இன்பக் காவலரான வேந்தர்; திரையிடு
மணலினும் பலர் - கடற்றிரைகள் கொழித்தொதுக்கும் நுண்மனலினும்
பரலாவர்; சுடு பிணங்காடு பதியாக - பிணஞ் சுடும் சுடு காட்டைத்
தமக்கு முடிவிடமாக; போகி - சென்று சேர்ந்து; தத்தம் நாடு பிறர்கொள -
தத்தமக்குரிய நாட்டை மற்றவர் கொள்ள; சென்று மாய்ந்தனர் - இறந்து
போயினர்; அதனால்-; நீயும் கேண்மதி - நீயும் கேட்பாயாக; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை - இறவாமல் உடம்போடே என்றும்
இருந்தவர் யாரும் இல்லை; மடங்கல் உண்மை - இறப்பு உளது; மாயம்
அன்று - பொய்யன்று; கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு - கள்ளிகள்
பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டின்; வெள்ளில் போகிய
வியலுள் ஆங்கண் - வெள்ளிடையே யோங்கிய அகன்ற இடத்தின்கண்;
உப்பிலா அவிப் புழுக்கல் - உப்பின்றி வேகவைத்த சோற்றை; கைக்கொண்டு
பிறக்கு நோக்காது - கையிற்கொண்டு பின்புறம் பாராது; இழி பிறப்பினோன்
ஈயப் பெற்று - இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று; நிலம் கலனாக
விலங்கு பலி மிசையும் - நிலத்தையே உண்கலமாகக் கொண்டுவைத்து
வேண்டாத பலியுணவை யேற்கும்; இன்னா வைகல் வாராமுன் - துன்பம்
பொருந்திய இறுதி நாள் வருமுன்பே; முந்நீர் வரைப்பகம் முழுதுடன்
துறந்து - கடல் சூழ்ந்த நிலவுலக வாழ்வைப் பற்றறத் துறந்து; நீ முன்னிய
வினைசெய் - நீ கருதிய தவமாகிய நல்வினையைச் செய்வாயாக; எ - று.


     இருகை, கருமை, பெருமை - பரப்பு. உடையிலை மிகச் சிறியது;
“சிறியிலையுடை” (புறம். 124) என்பது காண்க. நாடாளும்வேந்தர் இறப்பின்,
அவர் நாட்டரசை அவர்தம் மக்களே பெறினும் அவரைப் “பிறர்” என்றார்,
இறக்குங்கால் உயிர்த் துணையாக வாராமைபற்றி. தோன்றிய வுடம்பு வளர்ந்து
முதிர்ந்து மீள மடங்கிச் சென்று ஒடுங்குதற்கிடனாதலின் சாக்காடு
மடங்கலெனப்பட்டது. தான் கொள்ளக் கருதிய உயிரைக் கொண்டனறி
மீளாமைபற்றிக் கூற்று மடங்கலெனப்பட்ட தெனினுமமையும். சுடுகாட்டில்
ஈமத்தில் இடுமுன், புலையன் உப்பில்லாச் சோறட்டு நிலத்தில் வைத்துப்