பக்கம் எண் :

33

     

“வினையெஞ்சு கிளிவிக்கு வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய,
முடிபாகும்மே” (எச்ச. 36) என்பது தொல்காப்பியம். ஆகி, கெழீஇ,
நக்கென்னும் செய்தெனெச்சங்கள் காரணமாகாமையின் ஆக்கச்சொல்
விரிக்கப்படவில்லை.

---

213. கோப்பெருஞ் சோழன்

     கோப்பெருஞ் சோழன் உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில்,
அவன் மக்கள் சிற்றினச் சேர்க்கையால் அறிவு பேதுற்று அவன் பால்
பகைகொண்டு போர்க்கெழுந்தனர். அவர் அறிவு திருந்த வேண்டிச்
சான்றோர் செய்த முயற்சிகள் பயனிலவாயின. அவர்கட்குத் துணைசெய்யக்
கூடிய புல்லல்களும் உளராயினர். தந்தையொடு போருடற்றவ தொழியப்
பிறிதொன்றும் கருதாத பேதைகளான மக்கள் செயல் கோப்பெருஞ் சோழன்
உள்ளத்திற் கொதிப்பை யுண்டுபண்ணிற்று. மறமும் மானமும் பொங்கி
யெழுந்துகோப்பெருஞ்  சோழனைப்போர்க்கெழுமாறுதூண்டின.
இருதிறத்தாரும் போர்க்குரிய வற்றைச் செய்யத் தொடங்கினார். இச் செயல்
நாட்டிலிருந்த நல்லிசைச் சான்றோருக்குப் பெருங் கலக்கத்தை யுண்டு
பண்ணிற்று. நல்லறிவு நிறைந்த சொற்களைக் கேட்டற்கு ஒருப்படா உள்ளம்
படைத்த மக்களைத் தெருட்டுதலைவிடக் கோப்பெருஞ் சோழன் உள்ளத்தை
மாற்றுவதே மாண்பெனக் கண்டனர். தந்தையும் மக்களும் போர்செய்தலால்
விளையும் தீங்குகளையும் பழியையும் எடுத்து இயம்பினர் தொடக்கத்தில்
கோப்பெருஞ் சோழனும் அவர் கூற்றுகட்கு இடங்கொடானாயினன். முடிவில்
சோழன்தன்மக்கள்மேல்செல்லலுற்றான்.அதனைப்புல்லாற்றூர்
எயிற்றியனார் என்னும் சான்றோர் கண்டார். புல்லாற்றூர் என்பது
காவிரியின் வடகரையில் உள்ள ஊர்களுள் ஒன்று. அவர் போர்மேற்
செல்லும்சோழனையடைந்தார். போர்க்களத் திருப்பினும், சான்றோர்
அவைக்களத் திருப்பினும் அறிவுடையோர் அறிவுரை கேட்கும்
அமைதியுடையனாகிய கோப்பெருஞ் சோழன் அவரை வரவேற்றான். அவர்
அவனது மேற்செலவை விலக்கும் கருத்தினராய், “வேந்தே! நின்னொடு
பொர வந்திருப்போரையும்நின்னையும்நோக்கின், அவர்
தொன்றுதொட்டுவந்த நின் பகை வரல்லர்; பகைவரான சேர பாண்டியர்
குடியினரல்லர்; நீயும் சோழர்க்கு மாறான சேரபாண்டியர் குடியினனல்லை;
இவ்வுலகில் இம்மையில் நீ இப் போரையுடற்றி நல்ல புகழ் நிறுவி மறுமை
யுலகமெய்துவையாயின், நினக்குப் பின் இவ்வரசுரிமை நின்னொடுபொர
வந்திருக்கும் அவர்க்குத் தானே உரியதாய்ச் சென்று சேரும்; இது நீ
நன்கறிந்த தொன்று. மேலும் இப்போரில் நின்னோடு பொரும்,
நல்லறிவில்லாத இளையவர்கள் தோற்பரேல், நின்பெருஞ் செல்வத்தை
யார்க்குத் தரப்போகின்றாய்? ஒருகால் நீ இப்போரில் தோற்பாயாயின்,
பெரும்பழிதானே நிலைநிற்கும். ஆதலால், போரைக் கைவிடுவதே
பொருத்தமாகும். அன்றியும், நின் திருவடி அஞ்சினோர்க்கு அரணாகும்
அழகுடையது; அச் சிறப்புக் குன்றா வண்ணம் செய்யத்தக்கது ஒன்றே
உளது. இப்போரைத் தவிர்த்து வானோருலகத்து மேலோருவப்ப
அறம்புரிவதே கடன். அதனைச் செய்க” என்ற கருத்தமைந்த இப்பாட்டைப்
பாடிக் கோப்பெருஞ் சோழன் உள்ளத்தை மாற்றினார். சோழனும் சான்றோர்
உரையின் சால்பினைத் தெளிந்தான். படைவீரர்க்குப் போரைக் கைவிடுமாறு
பணித்தான். போர் நிகழ்ச்சி கண்டு வருந்திய சான்றோர்