பக்கம் எண் :

34

     

மகிழ்ச்சி கொண்டனர். மகிழ்ச்சி கொண்டிருந்த பகைவர் மனந்தடுமாறினர்.
முடிவில் கோப்பெருஞ் சோழன் மக்கட் செயலால் விளைந்த மானம்
பொறாது வடக்கிருந்து உயிர் துறந்தான்.

 மண்டம ரட்ட மதனுடை நோன்றாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
பொங்குநீ ருடுத்தவிம் மலர்தலை யுலகத்து
நின்றலை வந்த விருவரை நினைப்பிற்
5றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர்
 தமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவம்
நினையுங் காலை நீயு மற்றவர்க்
கனையை யல்லை யடுமான் றோன்றல்
பரந்துபடு நல்லிசை யெய்தி மற்றுநீ
10உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும்
 ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே
அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும்
இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே
நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
15எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
 நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
அதனால், ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந்
20தெழுமதி வாழ்கநின் னுள்ள மழிந்தோர்க்
 கேம மமாகுநின் றாணிழன் மயங்காது
செய்தல் வேண்டுமா னன்றே வானோர்
அரும்பெற லுலகத் தான்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளந்கே.

     திணை: வஞ்சி, துறை - துணைவஞ்சி. அவன் மக்கள் மேற்
சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.

    உரை:
மண்டு அமர் அட்ட மதனுடைய நோன்றாள் - மடுத்
தெழுந்த போரின்கண் பகைவரைக்கொன்ற மிகுதி பொருந்திய வலிய
முயற்சியையுடைய; வெண்குடை விளக்கும் - வெண்
கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும்;
விறல்கெழு வேந்தே - வென்றியையுடைய வேந்தே; பொங்கு நீர்
உடுத்த இம் மலர்தலை உலகத்து - கிளர்ந்த நீரையுடைய கடலாற்
சூழப்பட்ட இப்பரந்த இடத்தையுடைய உலகத்தின் கண்; நின்றலை
வந்த இருவரை