| | நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றோ ராயினு நோற்றோர்க் கொழியும் ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப் | 5. | பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து | | பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந் திரவலர்க் கருங்கல மருகாது வீசி வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல் | 10. | வாழச் செய்த நல்வினை யல்ல | | தாழுங் காலைப் புணைபிறி தில்லை ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறர் பாளர் முத்தீப் புரையக் காண்டக விருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் | 15. | யானறி யளவையோ விதுவே வானத்து | | வயங்கித் தோன்று மீனினு மிம்மென இயங்கு மாமழை யுறையினும் உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நாளே. |
திணை: பாடாண்டிணை. துறை; வாழ்த்தியல். சேரமான் மாவண் கோவும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது.
உரை: நாகத் தன்ன பாகார் மண்டிலம் - நாகலோகத்தைப் போன்ற வளவிய பகுதிகளையுடைய நிலவட்டம்; தமலே யாயினும் - தம்முடையவேயென வுரிமை கொள்ளப்பட்டனவாயினும்; தம்மொடு செல்லா - வேந்தர் தாம் இறக்குங்கால் அவரோடே மறைந்தொழியாமல் நின்று; வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும் - அவர்க்குப் பின்வரும் வேந்தர் ஒரு தொடர்பு மில்லாத வேற்று நாட்டவராக இருப்பினும்; நோன்மையுடையராயின் அவர்க்குரிய தாய்விடும்; ஏற்றபார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைய - பொருள் வேண்டி இரந்துநின்ற பார்ப்பனருக்கு அவருடைய நனைந்த கை நிறையும்படி; பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து - பொற்பூவும் பொற்காசும் நீர் வார்த்துக் கொடுத்து; பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாந்தி மகிழ்சிறந்து - பசிய இழை யணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த நாரால் வடிக்கப்பட்ட கட்டெளிவை யுண்டு களித்து; இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி - |