| உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சொரிதல் அறப்பொருட்டும், சிறத்தல் பொருட் பொருட்டும், வீசுதல் இன்பப்பொருட்டும் எனக் கொள்க.
விளக்கம்: தமிழ்வேந்தர் மூவரும் மனத்தால் ஒன்றுபடாமைக் கேது ஒவ்வொருவருக்கும் தாம் ஒருவரே மேம்பட்டு நிற்க ஏணையோர் தம் ஆணைவழியடங்கி நடக்கவேண்டுமென்றெழுந்த வேட்கையாகும்; அவ்வேட்கை நாட்டின்மேல் நிற்றலின், அதனை விலக்கி ஒருமை மனமுடையராதல் வேண்டும் என்று கருதினார் ஒளவையார். இத்தமிழகம் நாகத்தன்ன பாகார் மண்டிலம் என்று குறித்து, இதனைத் தாமேயாள வேண்டுமென்று எண்ணி, அதனால் ஏனையிருவரையும் பொருது வென்று நாட்டையடிப்படுத்த வேந்தரும் இறந்தனர்; இறந்தபோது தமிழகம் அவர்பின் சென்றொழியாது, வேற்றோர்க்கு என்று கருதாது, யாவர் தன்னைத் தாங்குகிறார்களோ, அவர்கள் அடிக்கீழ் இவ்வுலகம் நிற்கும் இறல்பிற்று. ஆதலால், நீவர் நும்முடைய நாட்டை இனிது தாங்கு முகத்தால், பார்ப்பார்க்கும் இரவலர்க்கும்வேண்டுவன நல்கி வாழ்தல் வேண்டும். இதுவே நீவிர் செய்யத்தக்க நல்வினை. இந் நல்வினையே நும்மை இனிது வாழச் செய்வத. இந்நல்வினையொழிய வேறே துணையில்லை; இவ்வளவே யான் அறிந்தது என்று கூறினார். இந்நல்வினையை மேற்கொண்டு நீவிர் மூவிரும் ஒருமை மனத்தோடு வாழ்வீராயின் வானத்திற்றோன்றும் விண்மீனினும் பெருமழையிற்றோன்றும் நீர்த்துளியினும் பல்லாண்டு நெடிது வாழ்விர்; இன்றேல், வீலிர் வேரொடு ஒழிவது ஒருதலை; இத் தமிழகமும் வேற்றவர் ஆட்சிக்குட்பட்டுத்தன் மொழி, கலை, பண்பாடு, செல்வம், வாணிகம் முதலியதுறை பலவற்றினும் சீரழிந்து வேற்றோர்க்கு அடிமை நாடாய்விடும் என்று உய்த்துணர வைத்தார். அப் பேதைவேந்தர் அவர் கூற்றை மனங்கொள்ளாராயினர். அன்று அவர் செய்த தீச்செயலால், இன்று இத் தமிழகம், மொழியும், கலையும் பொருளும், பண்பாடும் கன்றிப் பிற நாட்டவர் ஆட்சியாணைக்குத் தலைதாழ்ந்து செல்வதாயிற்று; அடிமையில் மடிந்தூரும் மடமையிற்றலைமை பெறுவ தாயிற்று; நாட்டுக்கு வறுமை உரிமையாயிற்று. 368. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃற டக்கைப் பெருவிறற்கிள்ளியும் யாது காரணத்தாலோ பெரும் பகை கொண்டு திருப்போர்ப்புறம் என்னுமிடத்தே கடும்போர் உடற்றினர். திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடியென வழங்குகிறது. இதனைக் கல்வெட்டுகள் திருப்பேர்த் திருப்புறம் (S. I. I. Vol. No.497) என வழங்கும். இவ்விடத்தே சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் போர் நிகழ்ந்ததும் அதன்கண் சேரமான் பற்றுக்கோட்பட்டதும். (புறம். 74) ஈண்டு நினைவு கூர்தற்குரியன. அப்போரில் இருவேந்தரும் புண்பட்டுப் போர்க்களத்தே வீழ்ந்தனர். அக்காலத்தே கழாத்தலையாரென்னும் சான்றோர் போர்க்களஞ் சென்று இருவரும் வீழ்ந்து கிடப்பது கண்டார். அக்காலத்தே அவர் சேரமானைப் பார்க்கையில் அவன் குற்றுயிராய்க் கிடந்தான். அந்நிலையில் அவன் தன்னைப் பாடி வந்த கோடியர்க்குத் தன் கழுத்தில் இருக்கும் ஆரத்தைக் காட்டிப் பரிசிலாக எடுத்துக்கொள்ளுமாறு |