|       | அவர்க்குக்           குறிப்பாயுணர்த்தினான்.   அது   கண்டு,   கையறவுமிக்க                  கழாத்தலையார் இப் பாட்டினைப் பாடினார். இதன்கண், வேந்தே! களிறு          பெறுவேமென்னின், அவை அம்பு பட்டுப் புண்ணுற்று வீழ்ந்தொழிந்தன:          தேர் பெறலாமென்னின், அவை பீடழிந்து சிதைந்து நிலத்தே கிடக்கின்றன;          குதிரைகளோ வெனின், அவை  வாள்வடுப்பட்டுக்  குருதி  வெள்ளத்தில்                  வீழ்ந்து கிடக்கின்றன;  இதனால்  பெறற்குரிய  பெருவளம்  பெறாமையின்                  இரவலர் இரங்குவாராயினர். தடாரிப்பறையை யறைந்துகொண்டு யான் வந்தது          நின்   தோளிடத்தே  அரவுபோற்சுற்றிக்கொண்டிருக்கும்  ஆரத்தைப்                  பெறற்பொருட்டேபோலும் என ஆசிரியர் அவனது மறமாண்பும் கொடை          நலமும் தோன்றப் பாடியுள்ளார். |   | களிறு முகந்து பெயர்குவ மெனினே             ஒளிறுமழை தவிர்க்குங் குன்றம் போலக்             கைம்மா வெல்லாங் கணையிடத் தொலைந்தன             கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவ மெனினே |  |  5. | கடும்பரி             நன்மான் வாங்குவயி னொல்கி |  |   | நெடும்பீ             டழிந்து நீலஞ்சேர்ந்             கொய்சுவற் புரவி முகக்குவ மெனினே             மெய்ந்நிறை வடுவொடு பெரும்பிறி தாகி             வளிவழக் கறுத்த வங்கம் போலக் |  |  10. | குருதியம்             பெரும்புணல் கூர்ந்தோழிந் தனவே,                                                           யாங்க |  |   | முகவை             யின்மையி னுகவை யின்றி             இரப்போ ரிரங்கு மின்னா வியன்களத்             தாளழிப் படுத்த வாளே ருழவ             கடாஅ யானைக் கால்வழி யன்னவென் |  |  15. |              தெடாரித் தெண்கண் டெறிர்ப்ப வொற்றிப் |  |   | பாடி             வந்த தெல்லாங் டூகாடியர்             முழவுமரு டிருமணி மிடைந்ததோள்             அரவுற ழார முகக்குவ மெனவே. |  
              திணை: வாகை. துறை: மறக்களவழி. சேரமான்         குடக்கோ நெடுஞ்          சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியொடு போர்ப்          புறத்துப் பொருது வீழ்ந்து ஆரம் கழுத்தினதாக உயிர் போகாது          கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
               உரை: களிறு முகந்து பெயர்குவம் எனினே         - களிறுகளைத் தரப்          பெற்றுச் செல்வேமென்று கருதினால்; ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம்போல         - விளங்குகின்ற மழைமுகிலைத் தடுக்கும் குன்றுகளைப் போல; கைம்மா          எல்லாம் கணையிடத் தொலைந்தன - யானைக ளெல்லாம் நின் அம்புபட்டு          இறந்தன; கொடுஞ்சி்நெடுந்தேர் முகக்குவம் எனின் - கொடுஞ்சியொடு          கூடிய நெடிய தேர்களைத் தரக்கொண்டு செல்வோமென்றார்; கடும்பரி          நெடுமான் வாங்கு வயின் ஒல்கி - கடிய  |