பக்கம் எண் :

344

     

செலவையுடைய குதிரைகள் வளைத்தீர்த் தோடுதலால் இடந்தோறும்
நொடித்துத் தளர்ந்து - நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்ன - தம் நெடிய
வலியழிந்து முறிந்து நிலத்தே சிதறி வீழ்ந்தன; கொய் புரவி முகக்குவம்
எனின் - கொய்யப்பட்ட பிடரி மயிரயுடைய குதிரைகளைத் தரப்பெற்றுச்
செல்வோமென்றால்; மெய் நிறை வடுவொடு பெரும் பிறிதாகி - உடல்
முழுவதும் நிறைந்த வாட்புண்களுடனே வீழ்ந்திறந்து; வளி வழக் கறுத்த
வங்கம் போல - காற்றிக்க மின்றி நிற்கம் மரக்கலம்போல; குருதியும்
பெரும்புனல் கூர்ந்தொழிந்தன - குருதி வெள்ளத்தில் நிறைந்து
மிதக்கலாயின; முகவை இன்மையின் உகவை இன்றி - பெறுதற்குப்
பரிசிலொன்றும் காணப்பெறாமையால் உவகை யின்றி; இரப்போர் இரங்கும்
இன்னா வியன் களத்து - இராவலராகிய பரிசிலர் வருந்தும் துன்பமுற்ற
அகன்ற போர்க்களத்தில்; ஆள் அழிப்படுத்த வாளேர் உழவ -
காலாட்களாகிய வைக்கோலைக் கடாவிட்டொதுக்கிப் போரெனக் போரெனக்
குவித்த வாளாகிய ஏரையுடைய உழவனே; கடாானைக் கால்வழி யன்ன -
மதமுடைய யானையின் அடிச்சுவடுபோன்ற; என் தெடாரித் தெண்கண்
தெளிர்ப்ப வொற்றி - என்னுடைய தடாரியினது தெளிந்த கண் ஒலிக்க
இசைத்து; பாடி வந்ததெல்லாம் - யான் பாடி வந்ததெல்லாம் காரணம்;
கோடியர் முழவு மருள் திருமணி மிடைந்த தோள் - கூத்தரது முழவுபோன்ற
அழகிய மணியாற் செய்யப்பட்ட வாகுவலயம் அணிந்த தோளிடத்துக்
கிடக்கும்; அரவுறழ் ஆரம் முகக்குவம் என - பாம்பு போலும் ஆரத்தைப்
பெறலாமென்று போலும்; எ - று.


     எனவென்புழிப் போலும் என ஒரு சொற்பெய்து முடித்துக்கொள்க.
உழவ, களிறு தொலைந்தன; தேர் நிலஞ் சேர்ந்தன: புரவி கூர்ந்தொழிந்தன;
பாடிவந்ததெல்லாம்  ஆரம்  முகக்குவமென்று  போலும்  எனக்  கூட்டி
வினைமுடிவு செய்க. போரிற் பகைவரை வென்று பெறும் களிறும், தேரும்,
குதிரையும், பிறவும் பொருநர் பாணர், கூத்தர் முதலாயினார்க்கு வழங்குவது
பண்டைவேந்தர் மரபு. ஈண்டு இவற்றைப் பெறலர்மென வந்த இரவலர் களிறு
கணையிடத்  தொலைந்தவாறும்,  தேர்  பீடழிந்து  நிலஞ்  சேர்ந்தவாறும்,
குரிரைகள் குருதிவெள்ளத்திற் கூர்ந்தொழிந்தவாறும் கண்டு வியந்தனரென்பார்,
“முகவை யின்மையின்  உகவை - யின்றி,  இரப்போர்  இரங்கும்  இன்னா
வியன்களம்” என்றார். உகவை, மகிழ்ச்சி, கால் வழி - கால் நிலத்தில்
அழுந்த வுண்டாகும் சுவடு.  தடாரி,  தெடாரியென  வந்தது.  பாம்பு
ஆரத்திற்குவமை; ‘விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு’. (புறம். 398)
என்று பிறரும் கூறுதல் காண்க. ஆக: அசைநிலை, மெய்ந் நிறைந்த
வடுவொடு என்றும் பாடம்.

     விளக்கம்: அரசர்பொரும் போர்க்களத்துக்குச் சென்று வெற்றி பெறும்
வேந்தர்களைப் பாடும் பாணர் முதலிய பரிசிலருக்குப் போரிடத்துத் தோற்ற
வேந்தருடைய களிறு, தேர், குதிரை முதலியனவும், அவரணிந்த கலங்களும்
கொடுக்கப்படுவதுமரபு. கழாத்தலையார் குடக்கோ