|       | விதைக்கப்படும் வித்தும்,         அது விளைந்து முற்றிக் கதிர் தலைசாய          நிற்றலும், அவற்றை யறுத்துப் போரிடுதலும் வயலுழவரப்ால் நிகழ்தல்போல,          போர்க்களத்தில் கருங்கை யானை மேகமாக, மறவர் எறிதற்குயர்த்த வாள்          மின்னலாக, போர்முரசு முழக்கமாக, மிக விரைந்த செலவினையுடைய குதிரை          வீசு வளியாக, வல்வில் வீங்கு நாண் செலுத்திய கணைகள் மழைத் தாரையாக          இவற்றால் கொலையுண்ட மாக்களின் குரதி தோய்ந்து ஈரமுற்ற போர்க்களம்          வயலாக, தேர் ஏராக, ஆயுதமாகிய படைகளால், கீழ்மேலாக மறிக்கப்பட்ட          படை முதலியவற்றின் நிரை படைச்சாலாக, வெள்வேலும் கணையமும்          எறியப்பட்டுச்சிதறி வீழ்வன விதையாக, பகைவரை பெட்டிச் சாய்த்தலால்          மிதிப்புண்டு நசுங்கிய நிணங்களின் அச்சந்தரும் நிலை பைங்கூழாகப்          பேய்மகளிர் பிணங்களின் முன்சூழ்ந்துவர, சிதைந்த பிணங்களின்          குவைபோராக, அவற்றைப் பூதம், பேய், நரி முதலியன முகந்துண்ணும்          வகையில் தான் தன்னைப் பாடி வருவோர்க்கு அவர் வேண்டுவன          ஈதற்பொருட்டுச் செங்குட்டுவன் வீற்றிருக்கின்றான்; அவனைத் தடாரியை          பொருநன் ஒருவன் சென்று கண்டு, வேந்தே! யான் என் தடாரியை யறைந்து          நின் விறற்புகழ் பாடிவந்தேன்; என்வறுமை தீரக் கன்றும் பிடியும் விரவிய,          இமயம் போலுயர்ந்த, களிறுகளைப் பரிசிலாக நல்குவாயாக என்று கேட்கும்          வகையில் ஆசிரியர் பாடியுள்ளார். |   | இருப்புமுகஞ்             செறித்த வேந்தெழின் மருப்பிற்             கருங்கை யானை கொண்மூவாக             நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த             வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த |  |  5. | குருதிப்             பலிய முரசுமுழக் காக |  |   | அரசராப்             பனிக்கு மணங்குறு பொழுதின்             வெவ்விசைப் புரவி வீசுவளி யாக             விசைப்புறு வல்வில் வீங்குநா ணுகைத்த             கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை |  |  10. | ஈரச்             செறுவயிற் றேரே ராக |  |   | விடியல்             புக்கு நெடிய நீட்டிநின்             செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சாற்             பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி             விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் |  |  15. | பேய்மகள்             பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு |  |   | கணநரி             யோடு கழுதுகளம் படுப்பப்             பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்             பாடுநர்க் கிருந்த பீடுடை யாள             தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி |  |  20. |              வேய்வை காணா விருந்திற் போர்வை |  
  |