| அரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடைய நெடுங்கோட் டிமயத் தன்ன | 25. | ஓடை நுதல வொல்குத லறியாத் | | துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகைவெய் யோயே. |
திணையும் துறையு மவை. துறை: ஏர்க்கள உருவகமுமாம். சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
உரை: இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின் - இரும்பாற் செய்யப்பட்ட பூண ் நுனியிற் செறிக்கப்பட்ட உயர்ந்த அழகிய கொம்பினையும்; கருங்கை யானை - பெரிய கையினையுமுடைய யானை; கொண்மூவாக - முகிலாகவும்; நீள் மொழி மறவர் எறிவனர் - உயர்ந்த வாள் மின்னாக நெடுமொழியையுடைய வீரர்கள் பகைவர்மேல் எறிதற்காக ஏற்திய வாள் மினனலாகவும்; வயங்கு கடிப்பு அமைந்த குருதிப் பலிய முரசு முழக்காக - விளங்குகின்ற குறுந்தடிகொண் டடிக்கப்படுகின்ற குருதிப்பலி யூட்டப்பெற்ற முரசொலி மழையின் முழக்கமாகவும்; அரசு அராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் - அரசர்களாகிய பாம்புகள் அஞ்சி நடுங்கும் வருத்தமிக்க பொழுதின் கண்; வெவ்விசைப் புரவி வீசு வளியாக - வெவ்விய செலவையுடைய குதிரைகள் மோதுகின்ற காற்றாகவும்; விசைப்புறு வல்வில் வீங்கு நாண் உகைத்த கணைத் துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை - விசைத்துக் கட்டப்பட்ட வலிய வில்லினுடைய பெரிய நாண் செலுத்திய அம்புகளாகிய மழை பொழிந்த இடமகன்ற போர்க்களத்தில்; ஈரச் செறுவயின் - குருதி தோய்ந்து ஈரமாகிய செருக்களத்தின்கண்; தேர் ஏராக - தேர்கள் ஏர்களாகவும்; விடியல் புக்கு - விடியற்காலத்தே புகுந்து; நெடிய நீட்டி நின் செருப்படை மிளிர்த்த -திருத்துறு பைஞ்சால் நெடியவாகிய நின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் நெடியவாகிய நின் வேல் முதலிய படைக் கருவிகளை நீட்டி மாற்றார்ப் படைக் கலங்கள் கீழ் மேலாக மறிக்கப்பட்டாழ்ந்த மைந்த பசிய படைச் சாலின்கண்; பிடித்தெறி வெள் வேல் கணைய மொடு வித்தி - பிடித்தெறியும் வெள்ளிய வேலும் கணையமரமுமாகிய படைகளைத் துகள்படச் சிதைத்தெறிதலால் அவை விதைபோல் நிலத்திற் புதையுண்ணச் செய்து; விழுத்தலை சாய்த்த வெருவருபைங் கூழ் பெரிய தலைகளை வெட்டிச் சாய்த்து மூளையும் நிணமும் குழம்பிய கண்டார்க்கு அச்சம்பக்கும் பிணங்களாகிய பசிய பயிரினுடைய; பேய் மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் |