பக்கம் எண் :

348

     

போர்பு பேய்மகளிர் மொய்த்துச் சூழும் பிணங்கள் குவிக்கப்பட்டுயர்ந்த பல
போர்களை; கண நரி யோடு கழுது களம் படுப்ப - கூட்டமான நரிகளும்
பேய்களும் ஈர்த்துண்ண; பூதம் காப்ப - பூதங்கள் காவலைச் செய்ய; பொலி
களம் தழீஇ - பிணங்களாகிய நெல் பொலிந்த போர்க்களத்தே பொருந்தி;
பாடுநர்க் கிருந்த பீடுடையாள - போர்க்களம் பாடும் பொருநர் முதலியோர்
பாடக் கேட்டற்பொருட்டு வீற்றிருந்த பெருமை யுடையவனே; தேய்வை
வெண்காழ் புரையும் - கல்லிற் றேய்த்து அரைக்கப்படும் வெள்ளிய
சந்தனக்கட்டை போலும்; விசி பிணி வேண்வை காணா விருந்தின் போர்வை
- இறுக விசித்துக் கட்டப்பட்ட குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட;
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றி - அரித்த ஓசையுடைய தடாரிப் பறையைச்
சூடேற்றி யறைந்து; பாடி வந்திசின் - பாடி வந்தேன்; பெரும - பெருமானே;
பாடான்று - ஓசை நிறைந்து; எழிலி தோயும் இமிழிசை யருவி முகில்கள்
படியும் ஒலிக்கின்ற ஓசையையுடைய அருவிகள் பொருந்திய; பொன்னுடை
நெடுங்கோட்டு அமயத்தன்ன - பொன்னின் நிறம்ம பொரு்.நதிய நெடிய
உச்சியையுடைய இமயத்தைப் போல; ஓடை நுதல - பட்டமணிந்த
நெற்றியினையும்; ஒல்குதல் அறியா - சுருங்குதலில்லாத; துடியடிக் குழவிய
பிடி - துடிபோன்ற அடியையுடைய கன்றையுடைய பிடி யானைகள்; இடை
மிடைந்த - இடையிடையே செறிந்துள்ள; தாழா ஈகைத்தகை வெ்யோய் -
குன்றாத ஈகையாற் பிறக்கும் புகழை விரும்புபவனே; எ - று.


     யானைகள் மழை மேகமாகவும், மறவருடைய வாள் மின்னலாகவும்,
முரசொலி இடி முழக்காவும், அதுகேட்டு அஞ்சும்வேந்தர் பாம்பாகவும்,
புரவிகள் காற்றாகவும், கணை மழைத்துளியாகவும், குருதியீரல்பட்ட
போர்க்களம் வயலாகவும், பலரும் திரிந்து மிதிப்புண்பது திருத்தப்படும்
மறுசாலாகவும், கையறுப்புண்டு வீழும் வேலும் கணையமும் விதையாகவும்,
தலைசாய்ந்து வீழும்வீரர் வநை்து தலைசாய்ந்து நிற்கும் பசிய பயிராகவும்,
பிணக்குவை போர்பாகவும் உருவகம் கொள்க. பொலி களம், நெற்பொலி
நிறைந்த களம். உழவர் போர்க்களத்தே நின்று ஏர்க்களம் பாடும் பொருநர்
பாட, அப் பாட்டையேற்று அவர்கட்கு நெல்லைத் தருவதுபோல, வேந்தரது
போர்க்களத்தில் பொருநர் பாடும் புகழை ஏற்றலின், “பாடுநர்க்கிருந்த
பீடுடையாள” என்றார். தோலிலும் தோலாற் செய்யப் படும்வார்களிலும்
நரம்புகளிலும் காணப்படும் பிசிர் வேய்வை யெனப்படும். அது குற்றமாய்
இசைக்  கருவிக்குச்  சிறப்புத்  தாராமையின்,  “வே்வை  காணா
விருந்திற்போர்வை” யென்றார். “வேய்வை போகிய விரலுளர் நரம்பு”
(பொருந. 17) என்று பிறரும் “உருப்ப வொற்றி” யென்றார். தகை,
அழகுமாம். வெய்யோய், வேண்டற் பொருட்டாகி வெம்மையடியாகப்
பிறந்த