பக்கம் எண் :

350

     

வம்ப வடுகர் பைந்தலை சவட்டி” (அகம். 375) வென்றானென்று
குறிக்கின்றார். இப் பாழி யென்பது தொண்டைநாட்டு நெடுங்குன்றத்துக்
கல்வெட்டொன்றில் “பாழி ஒபிளியான திருவாஞ்சேரி” (A. R. No. 26 of
1934-5) என்று கூறப்படுகிறது. இது செங்கற்பட்டு தாலூகாவில் உளது.
வடுகரைச் சவட்டியது கொண்டு செருப்பாழி தொண்டைநாட்டுப் பாழியாகலாம்
என்று கருதப்பட்டது. ஏனை நாடுகளிலும் பாழியெனப் பெயரிய ஊர்கள்
பலவுண்டு. சோழநாட்டுப் பாழி அரதைப் பெரும்பாழி யென்றும் இக்காலத்து
அரித்துவாரமங்கல மென்றும் வழங்கும். இந்த இளஞ்சேட்சென்னி, நெய்தலங்
கானல் இளஞ்சேட்சென்னி யெனவும், சேரமானுடைய பாமுளூரை யெறிந்த
இளஞ்சேட்சென்னி யெனவும், செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி
யெனவும் இத்தொகை நூலாற் குறிக்கப்படுகின்றான். இனி, இடையன் சேந்தன்
கொற்றனார் பாழி யெறிந்த சென்னியை இளம்பெருஞ் சென்னி யென்றலின்,
நெற்தலங்கானல் என்னுமித்தே தோன்றிச் சேரமானது பாமுளூரை யெறிந்த
இளஞ்சேட்சென்னி, இளம்பெருஞ் சென்னியின் வேறாவன் என்றும்,
செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ் சென்னியும், பாமுளூரெறிந்த இளஞ்செட்
சென்னியும் உடன்பிறந்ததோராகலாமென்றும்,இருவரும் ஒருகாலத்தவராதலின்
ஊன்பொதி பசுங்குடையாராற் பாடப்பெற்றன ரென்றும் கருதலுண்டு.
இக்கருத்து உண்மையாமாயின், செருப்பாழி யெறிந்த இளம்பெருஞ் சென்னி
யெனற்பாலது ஏடெழுதினோரால் இளஞ்சேட்சென்னி யெனத் தவறாக
எழுதப்பட்டதெனக் கோடல் வேண்டும். இந்த இளஞ்சேட்சென்னி வடுகரை
வென்று களங்கொண்ட செய்தியறிந்த ஊன்பொதி பசுங்குடையார் அவன்பாற்
சென்று, பகைவர்பால் அவன் பெற்ற களிறுகளைப் பரிசிலாகப் பெறக் கருதி
இப் பாட்டினைப் பாடினார். இதன்கண், தம்மைப் புரப்போர் இல்லாமையால்
தம்முடை சுற்றத்தார் பசியால் வருந்த அவருடனே தாம் காடு பல கடந்து
அவன்பால் வந்ததாகவும், அவன் பகைவரைக் கொன்று, பேய்மகள் குரவை
யயரப், பருந்தும் கழுகும் இருந்து பிணம் தின்ன வென்றி மேம்பட்டிருந்ததாகவும்,
தாம் புகர்முக முகவை விரும்பி வந்திருப்பதாகவும் குறித்துரைக்கின்றார்.

 வள்ளியோர்க் காணா துய்திற னுள்ளி
நாரும் போழுஞ் செய்தூண் பெறாஅது
பசிதினத் திரங்கிய விரும்பே ரொக்கற்
கார்பதங் கண்ணென மாதிரந் துழைஇ
 5.வேருழந் துலறி மருங்குசெத் தொழியவந்
 தத்தக் குடிஞைத் துடிமரு டீங்குரல்
உழுஞ்சிலங் கவட்டிடை யிருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொ டிசைக்கு மாங்கட்
கழைகாய்ந் துலறிய வறங்கூர் நீளிடை
 10.வரிமாற் றிரங்கிய கானம் பிற்படப்
 பழுமர முள்ளிய பறவை போல
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
விளைந்த செழுங்குர லரிந்துகால் குவித்துப்