பக்கம் எண் :

351

     
 15. படுபிணப் பல்போர் பழிய வாங்கி
 எருதுகளி றாக வாண்மட லோச்சி
அதரி திரித்த வாளுகு கடாவின்
அகன்கட் டடாரி தெளிர்ப்ப வொற்றி
வெந்திறல் வியன்களம் பொலிகென் றேத்தி
 20.இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பின்
 வரைமருண் முகவைக்கு வந்தனென் பெரும
வடிநவி லெஃகம் பாய்ந்தெனக் கிடந்த
தொடியுடைத் தடக்கை யோச்சி வெருவார்
இனத்தடி விராய வரிக்குட ரடைச்சி
 25. அழுகுரற் பேய்மக ளயரக் கழுகொடு
 செஞ்செவி யெருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே.

     திணையும் துறையு மவை. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்
சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.


     உரை: வள்ளியோர்க் காணாது - வள்ன்மையுடைய பெருமக்களைக்
காணப்பெறாமையால்; உய் திறன் உள்ளி நாரும் போழும் செய்து - உய்யும்
வகையை யெண்ணிப் படைமடற்கண் பெறப்படும் நாரும் பனங்குருத்தும்
கைக்கொண்டு; ஊன்பெறாது பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு -
உணவு கிடைக்கப் பெறாமையாற் பசிநின்று வருத்த வருந்திய என்னுடைய
பெரிய சுற்றத்தார்க்கு; ஆர்பதம் கண்ணென - நிறைந்த உணவு
பெறவேண்டுமென்பதிலே நோக்கம் இருப்பதறிந்து; மாதிரம் துழைஇ -
நாற்றிசையும் தேடி; வேர் உழந்து உலறி - மேனியில் வியர்வை யொழுக
அலைந்து புலர்ந்து; மருங்கு செத்து ஒழிய வந்து - வயிறொட்டி வாட வந்து;
அத்தக் குடிஞைத் துடியோசைபோலும் கடிய குரலோசை; உழுஞ்சில் அம்
கவட்டிடை இருந்த - உழுஞ்சின் மரத்தின் கவடுகளிலிருந்த; பருந்தின் பெடை
பயிர் குரலோடு இசைக்கும் - பெடைப் பருந்தையழைக்கும் சேவற் பருந்தின்
குரலோடு கலந்தொலிக்கும்; ஆங்கண் - அவ்விடத்து; கழையாய்ந்து உலறிய
வறங்கூர் நீள் இடை - மூங்கில் காய்ந்து உலறிக் கிடக்கும் நீரின்றி வறம்மிக்க
நீண்ட வழியிடத்தே; வரி மரல்திரங்கிய கானம் பிற்பட - வரிகளையுடைய
மரற் பழங்கள் வற்றித் திரங்கிக் கிடக்கும் காடுகள் பிற்பட்டொழிய; பழு
மரம் உள்ளிய பறவை போல - பழுத்த மரங்களை நினைந்து செல்லும்
வௌவால்களைப் போல; ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென - ஒள்ளிய
வில்லும் வாளுமாகிய படையாகிய மழை