| | கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப் | 5. | பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற் | | கூவிள விறகி னாக்குவரி நுடங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின் ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட மாமறி பிண்டம் வாலுவ னேந்த | 10. | வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம் | | வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப் புலவுக்களம் பொலிய வேட்டோய்நின் நிலவுத்திக ழார முகக்குவ மெனவே. |
திணை: வாகை. துறை: மறக்கள வேள்வி. அவனை மாங்குடி கிழார் பாடியது.
உரை: விசிபிணித் தடாரி இம்மென ஒற்றி - விசித்துக் கட்டப்பட்ட கிணைப்பறை இம்மென வொலிக்கும்படி யறைந்து; ஏத்தி வந்ததெல்லாம் - நின்னைப் பாராட்டி வந்ததற் கெல்லாம் காரணம்; முழுத்த இலங்குவாள் அவிரொளி வலம்படி மி்ன்னி - குறைவின்றி விளங்கும் வாளினுடைய மிக்க ஒளி வெற்றியுண்டாக மழைமின்னுப்போல மின்னி; கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை - அம்புகளாகிய மழையைப் பெய்த இடம் நிறைந்த பாசறைக்கண்ணே; பொருந்தாத் தெவ்வா அருந்தலை யடுப்பின் - மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரிய தலைகளாற் செய்ப்பட்ட அடுப்பிலே; கூவிளவிறகின் ஆக்குவரி நுடங்க - கூவியங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே, வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க ஆனா மண்டை வன்னியந் துடுப்பின் - தலைிற் பொருந்தாது நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னிமரத்தின் கொம்பை யதிற் செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால்; ஈனா வேண்மாள் - ஈனாத பேண்மகள்; இடந்து துழந்து அட்ட - தோண்டித் துழாவிச் சமைத்த; மா மறு பிண்டம் - மாக்களும் உண்ண மறுக்கும ் ஊன்சோறாகிய பிண்டத்தை; வாலுவன் ஏந்த - பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப்பானாய் ஏந்திக்காட்ட; வதுவை விழாவின் - திருமணவிழாவில் நிகழ்த்துவதுபோல்; புதுவோர்க்கேல்லாம் வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்க என - விருந்தினர் எல்லோருக்கும் கலயத்தின் வெவ்விய வாய் வழியாகப் பெய்த புதுநீர் அமைவதாக என்று சொல்லி நீரைத் தெளித்து; புடவுக் களம் பொலிய வேட்டோய் - புலால் நாறும் போர்க்களம் விளங்கக் களவேள்வி செய்தவனே; நின் நிலவுபோல் ஒளி திகழும் மாலையைப் பெறாமென்றே யாகும்; எ - று. |