| தடாரிஒற்றி ஏத்தி வந்ததெல்லாம், வேட்டோய், நின் ஆரம் முகக்குவம் எனவேயாகும் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. வாளின் ஒளி மின்னலாகவும் அம்புகள் மழைத்தாரையாகவும் உவமம் செய்தவாறு.மனம் பொருந்தாமையின் தெவ்வராயினமை தோன்றப் பொருந்தாத் தெவ்வர் என்றார். பகைவர் உடற்ற சையைக் குடரோடே உலையில் பெய்து அடுங்கால் சூடேறவேறக் குடர்கள் வெந்து மென்மை யெய்து தலின், ஆக்குவரி நுடங்க வென்றார். வரிகளையுடைய குடர் வரியெனப்பட்டது. வேண்டாள் அடும் கூழைத் துழாவுதற்குக் கொள்ளும் துடுப்பிற்கக் கொம்பு வன்னிமரக் கொம்பு என்றும் அகப்பை மண்டையோடென்றும் விளக்குதற்கு. ஆனா மண்டை வன்னியந் துடுப்பின் என்றும் கூறப்பட்டது. இவ்வாறு அட்டகூழ் பொறுத்தற்கரிய புலால்நாற்ற முடையதாகலின் எத்தகைய விலங்கும் அதனை விரும்பாதுமறுக்குமாறு தோன்ற, மாமறு பிண்டம் என்றார். புதுநீர், வழிபடுங்கலத்துப்புதிது பெய்தநீர். அதன் குறுகிய வாயிடத்தொழுகும் நீர் தெய்வக் காப்புடையதாய் யாவராலும் விரும்பப் படுவதாயிருத்தலின் அதனை, வெவ்வாய்ப் புதுநீர் என்றார். நிலவொளி போல் தண்ணிய வொளியைச் செய்தலின். முத்துமாலை, நிலவுத் திகழார மெனச் சிறப்பிக்கப்பட்டது. ஆம் என ஒரு சொற்பெய்து முடிக்க.
விளக்கம்: மறக்கள வேள்வியென்பது, அடுகிற லணங்கார, விடுதிறலான் களம் வேட்டன்று (பு. வெ. மா. 8:1) என வரும். பகைவர் தலையை அடுப்பாகவும்,கூவிளங் கட்டையை அடுப்பெரிக்குங் கட்டையாகவும் கொண்டு மண்டையோடும் வன்னிமரக்குச்சியும் கொண்டமைத்த அகப்பையால் ஈனாவேண்மாள் கூழடுவதும், அதனைப் பேய்கட்கு அளித்து உண்பிப்பதும் களவேள்வியாகக் கூறப்படுகின்றன. அஞ்சுவந்த பே்ார்ககளத்தான்.ஆண்டலை யணங்கடுப்பின் வயவேந்த ரொண்குருதி, சினத் தீயின் பெயர்வு பொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின், தொடித்தோட்கை துடுப்பாக, ஆடுற்ற வூன் சோறு நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர (மதுரை. 28-38) எனக் கவேள்வி செய்யுந் திறத்தை இவ்வாசிரியரே பிறாண்டும் கூறுவர். இது பூதநீர் என்று இச்சுப்படியிற் காணப்படுகிறது. பூத நீரை, பூத தீர்த்தமென்று, அஃதாவது பஞ்ச தீர்த்தங்களில் பூதங்களின் பொருட்டு உள்ளங்கையினின்று விடப்படும்நீர் என்றும் சைவ சமய நெறி (பொது. 66) கூறுகிறது. பூதநீர் என்பதே பாடமாயின், தருப்பைப்புல் வளர்ந்த பொய்கையிடத்து நீர் என்றும், புது மட்கலத் துப் புதுநீர் என்றும், பூதமும் நீரும் எனப்பிரித்து எள்ளும் நீருமென்றும்பொருள் கொள்ளப்படுதலின், பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் என்றதற்கேற்ப ஈண்டைக்குப் பொருந்துவதறிந்து கொள்க.ஆசிரியர் நக்கீரனார், ஒருமுகம், செறுநர்த் தேற்த்துச் செலசம முருக்கிக், கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே (முருகு. 98-100) என்பதனால், இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு, பின்வந்த வெற்றி வேந்தர் பலரும் இக் களவேள்வி செய்தொழுகினரென வறியலாம். மறக்களவேள்வி யென்றொரு நிகழ்ச்சியினை ஆசிரியர் தொல்காப்பியர் குறித்திலர் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. ஏர்க்களம் பாடும் இரவலர்க்கு ஏரோர் கொடைவுரிவது போலப் போர்க்களம் பாடும் இரவலர்க்கு ஏரோர் கொடைபுரிவது போலப் போர்க்களம் பாடும் இரவலர்க்குத் தேரோர் கொடைபுரிவது போர்க்கள வேள்வியென அறிக. |