பக்கம் எண் :

360

     

373. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     இச் சோழன், கிள்ளிவளவன் என்னும் பெயரினன். இவன் குளமுற்ற
மென்னுமித்தே இறந்தனால், பிற்காலச் சான்றோர் இவனைக் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளிவளவன் எனக் குறிப்பாராயினர். சில ஏடுகளில் இப் பெயர்
குராப்பள்ளித்    துஞ்சிய    கிள்ளிவளவன்    என்று    காணப்படுவது
ஏடெழுதினோரால்  நேர்ந்த   பிழை.   குராப்பள்ளித்   துஞ்சியவன்
பெருந்திருமாவளவன் எனப்படுவன். அவன் வேறு; சோழன் நலங்கிள்ளிக்குத்
தம்பியான மாவளத்தான் வேறு. ஒருகால் இந்த வாவளத்தானே குராப்பள்ளித்
துஞ்சிய பெருந்திருமாவளவன் என வழங்கப்பட்டிருக்கினும் இருக்கலாம்.
அஃது ஈண்டைக்கு வேண்டிய ஆராய்ச்சியன்று. குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனது  இறுதிக்   காலத்தில்   விளங்கியவர்   கோவூர்கிழார்.
கிள்ளிவளவனுக்குப் பின்வந்தவன் சோழன் நலங்கிள்ளி. சோழநாட்டில்
நலங்கிள்ளி ஒருபாலும் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒருபாலும்
இருந்து ஆட்சிசெய்தனர்.  இப்பாட்டின்  இடையே  சில   அடிகள்
சிதைந்திருக்கின்றன. இனி, குராப்பள்ளியென்பது தஞ்சை மாநாட்டிலுள்ள
திருவிடைக்கழி யென்னும்  ஊராகும்.  இங்குள்ள  இறைவனுக்குத்
திருக்குராவுடையார் (A. R. No. 269 of 1925) என்பது பெயர். இத்
திருக்குராவுடைய இறைவனை முருகனாகக்கொண்டே கி. பி. ஒன்பதாம்
நூற்றாண்டில் வாழ்ந்த செப்புறைச் சேந்தனார் தமது திருவிசைப் பாவைப்
பாடியுள்ளார். இங்கே மிகப் பழையதொரு சிவன் கோயில் சோளேச்சுரம்
என்ற பெயருடன் இருப்பதாகவும், அது குராப்பள்ளித் துஞ்சிய
பெருந்திருமாவளவனது பள்ளிப்படைக் கோயிலாக இருக்கலாம் என்றும்
காலஞ்சென்ற சீகாழி, சைவத்திரு, முத்துத்தாண்டவராய பிள்ளை கூறுவர்.
இக் கிள்ளிவளவனை, ஆசிரியர் கோவூர் கிழார், இப் பாட்டின்கண்
களம்பாடும் இளம்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாராட்டியுள்ளார்.
இவ் வளவன், முரசம் மழையென முழங்க, களிறுகள் முகில்போல் திரள,
தேரும் குதிரைகளும் மழைத்துளிபோற் சிதைந்து வீழ அம்புகள் காற்றெனச்
செல்ல வீரருடனே கூடிக் கொங்கரொடு பொருது அவர் புறந்தந்தோடச்
செய்தானெனவும், இவ்வாறே குடநாட்டுவஞ்சிநகர் முற்றத்திற் போருடற்றி
வயக்களனாக்கினனெனவும், குறிக்கின்றார். முன்னோராகிய பொருநர் பலர்
உயர்ந்த வேந்தருடைய களந்தொறுஞ் சென்று பாடிக் களிறாகிய பரிசில் பல
பெற்றனரெனப் பெரியோர் கூறக்கேட்ட இப் பொருநன் தானும் அவ்வாறே
வளவனை யொத்த வேந்தர் பிறரில்லாமை கண்டு கிள்ளிவளவன்பால் பகைப்
புறத்துப் பெற்றவற்றைப் பரிசிலாகப் பெறவேண்டி வந்ததாக இப் பாட்டின்கட்
கூறுகின்றான்.

 உருமிசை முரச முழக்கென விசைப்பச்
செருநவில் வேழங் கொண்மூ வாகத்
தேர்மா வழிதுளி தலைஇ நாமுறக்
கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை
 5.இழிதரு குருதியொ டேந்திய வொள்வாட்
 பிழிவது போலப் பிட்டையூ றுவப்ப
மைந்த ராடிய மயங்கு பெருந் தானைக்