உரை: உருமிசை முரசம் முழக்கென சைப்ப - இடியினது ஓசையைத் தன்பாலுடைய முரசு மழையிடத்து முழக்கம் போல முழங்க; செருநவில் வேழம் கொண்மூவாக - போரிற் பயின்ற யானைகள் முகில்களாகவும்; தேர்மா அழிதுளி தலைஇ - தேர்களும் குதிரைகளும்சிதைந்து பரந்து மழைத்துளியாகவீழ்ந்து கெட; நாம் உறக் கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை - அச்சமுண்டாக அம்புகளாகிய காற்று வீசுகின்ற இடமகன்ற பாசறையும்; இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் - சொரிகின்ற குருதியோடே கையிலேந்திய வாட்படையால்; பிழிவ துபோல - உடலைப் பிழிந்தெடுத்தற்குப் பிளந்தாற் போல்; பிட்டை ஊறுஉவப்ப - பிளத்தலாலுண்டாகிய புண்ணுற்று மகிழ்ச்சி யெய்த; மைந்தர் ஆடிய மயங்கு பெருந்தானை வலியுடைய வீரர் போர்செய்தற்காக விரும்பிச் சேர்ந்திருக்கின்ற பெரிய தானையால்; கொங்கு புறம் பெற்ற கொற்றவேந்தே - கொங்கு நாட்டவரைப் புறந்தந் தோடச்செய்த வெற்றியையுடைய வேந்தனே;.....................தண்டா மாப்பொறி - குறையாத பெரிய பொறிகளையும்; மடக் கண் மயில் - மடவிய கண்களையுமுடைய மறிப்பெடை; இயன்று மற லியாங்கு - மாறுகொண்டு முன்னும் பின்னும் பன்முறை நடந்ததுபோல; நெடுஞ் சுவர் நல்லில் புலம்ப - நெடிய சுவர்க ளையுடிய நல்ல தம் இல்லங்கள் தனிமைப்பட; கடைகழிந்து - அவற்றினின்றும் அகன்று சென்று; மென்றோள் மகளிர் - மெல்லிய தோளையுடைய மகளிர்; மன்றம் பேணார் - மன்றத்தை நாடிச் செல்லாது; புண் உவந்து - தம் கணவன் போரிற் பெரிதும் விழுப்புண்ணைக் காணவிரும்பி;.....................உளையணிப் புரவி வாழ்கென - தலையாட்டமாகிய அணியணிந்த குதிரை வாழ்வதாக என்று வாழ்த்தி; சொல் நிழலின்மையின் புகழமைந்த புகலிடம் பிறி தில்லாமையால்; நின்னிழல் சேர நின்னுடைய சிறந்த தாணிழலாகிய புகலைச் சேர்வாராக; நுண்பூண் மார்பின் புன் றலைச் சிறாஅர் - நுண்ணிய பூணணிந்த மார்பினையும் புல்லிய தலையினையு முடைய சிறுவர்கள்; அம்பு அழிபொழுதில் தாம் தொடுத்து விளையாடி அம்பு இல்லையாகும்போது; தமர் மு கம் காணார் - தமக்கு அவற்றைச் செய்து தரும் தந்தை தன்னையரைக்காணாராய்;.....................வாளில் தக்கான் - வாளால் எறியானாய்; வேந்து புறங் கொடுத்த வீய்ந்துகு பறந் தலை - வேந்தர்கள் புறந்தந் தோடியதனால் அழிந்து கெட்ட பே ார்க்களத்தில்; மாடமயங்கெரி மண்டி - பெருமாடங்களைப் பற்றி யெரிக்கும் தீப்போல நெருங்கி; உரும் எறிமலையின் - இடியேற்றால் தாக்குண்டு வீழும் மலைபோல; கோடிறுபு நிலஞ் சேர - கோடொடிந்து நிலத்தே வீழுமாறு கொன்று; சென்றோன் மன்ற - வெற்றியொடு சென்றான் தெளிவாக; |