| கொலைவன் - கொலையைச் செய்யும் தலைவன்; சென்றெறி வெம்புண் அறிநர் கண்டு கண் அலைப்ப - அவன்மேற் சென்று அவனை யெறியுங்கால் உண்டாகும் வெவ்விய புண்ணைக்கண்டு பஞ்சியிட்டாற்றுவோரும் தம் கண்களால் அப் புண்ணைக் காண ஆற்றாராய்க் கண்கலுழ்ந்து வருந்த; வஞ்சிமுற்றம் வயக்களனாக - வஞ்சிமாநகரின் முற்றம் வெற்றிபொருந்திய போர்க்களமாய் மாற; அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்து - அஞ்சாத இயல்பினரான வீரர்களின் பிணப்போரை யழித்து; குடவுலத்து அதரி கொண்டனை - குடநாட்டின்கண் கடாவிட்டாய்; நின்பணை தயங்கு வியன்களம் பொலிக - நின்னுடைய முரசு முழங்கும் அகன்ற போர்க்களம் விளங்குக; விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று விளக்கமுடைய உயர்குல வேந்தருடைய போர்க்களந் தோறுஞ் சென்று; பொலிய என்று ஏத்தி - விளங்குக என்று பாராட்டிப் பரவி; புகர்முக முகவை கொண்டனர் என்ப பெரியோர் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானையாகிய பரிசிலைப் பெற்றனர் என்று சொல்லுவர் பெரியோர்; யானும்-; அங்கண் மாக்கிணை அதிர வொற்றி - அழகிய கண்ணையுடைய தடாரிப்பறை யதிரும்படியதந்து; முற்றிலெனாயினும் இசையறிவு நிரம்பப் பெற்றிலேனாயினும்; காதலின் ஏத்தி - அன்புடன் பரவி; நின்னோரன்னோர் அவண் பிறர் இன்மையின் நின்னை யொப்பவர் இவ்வுலகிற் பிறர் இல்லாமையால்; பெரும - பெருமானே; மன்னெயில் முகவைக்கு வந்திசின் - பகைமன்னருடைய எயிலிடத்துக் கொண்ட பொருள்களைப் பரிசிலாகப் பெறுதற்பொருட்டு வந்தேன்; பகைவர் புகழ்ந்த ஆண்மை - பகைவரும் புகழ்ந்து பாராட்டும் ஆண்மையும்; நகைவர்க்குத் தாவின்று உதவும் பண்பின் - நண்பர்கட்குக் குறைவில்லாதவாறு உதவும் நற்பண்பும் உடையனாய்; பேயொடு கணநரி திரிதரும் ஆங்கண் - பேய்க்கூட்டமும் நரிக்கூட்டமும் ஊனுண்டு திரியும் அவ்விடத்தே; நிணன் அருந்து செஞ்செவி எருவை குழீஇ - ஊன் தின்று சிவந்த செவியையுடைய கழுகுகள் கூடி; அஞ்சுவருகிடக்கைய களம் கிழவோய் - கண்டார்க்கு அச்சம் பயக்கும் இடமாகிய போர்க்களத்தை உரிமையாகக் கொண்டவனே; எ - று.
கொங்கு புறம்பெற்ற வேந்தே, வஞ்சி முற்றம் வயக்களனாக, குடபுலத்து அதரி கொண்டனை; பெரும, கொண்டனரென்ப பெரியோர்; யானும் முற்றிலெனாயினும் ஒற்றி ஏத்தி, இன்மையின் முகவைக்கு வந்திசின், பெரும, ஆண்மையும் பண்பும் கொண்டு களம் கிழமை பெற்றோய் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மழை உருவகம் செய்யப் படுதலின், முழக்கெனப் பொதுப்படக் கூறினார். தேர்மா சிதைந்து துகள்பட்டுச் சிதறிப் பரந்து விழுமாறு தோன்ற, தேர்மா வழிதுளி தலைஇ என்றார். தேர்மா வழி துளி தலைஇ என்றதற்குத்தேரிற்பூட்டிய குதிரைகளின் வாயில்வழியும் நுரையினது துளி, பிசிராகத் துளிக்கும் |