பக்கம் எண் :

364

     

மழைக்கு உவமமாயிற்றென்றுமாம். பிளவுண்டது பிட்டை; பிளக்கப்
பட்டுண்டாகியபுண்பிட்டையூறெனப்பட்டது. ஆடுதல், போராடுதல்.


     மகளிர் தம் கணவன் போர்க்களத்தினின்றும் திரும்பி வராமையின்
தாம் மன்றம்சென்று எரிவர்த்து உடனுயிர் போக்க நினையாது போர்க்களம்
சென்று அவர்பெற்ற புண்ணைக் காண்டற்குப் புறம் போந்தனரென்பார்,
“நல்லில் புலம்பக் கடைகழிந்து மன்றம் பேணால் புண்ணு வந்து...”
என்றார். புரவி வாழ்க எனச்சொல்லி வாழ்த்திப் பரவுதற்கு உரிய தம்
வேந்தனின்மையின் நின்னை வேந்தனைக் கொண்டு நின் தாணிழலை
யடைந்தனரென்பான், சொன்னிழலின்மையின் நின்னிழல்சேர” என்றான்.
வேட்டுவச் சிறார்கள் தந்தையும் தன்னையரும் செய்துதரும் வில்லும்
அம்புங் கொண்டு விற்பயிற்சி செய்தலும் செய்யுங்கால் கையம்பு தொலை
ந்தவழிவேறே அம்பு செய்து தருமாறு தந்தை தன்னையரை நோக்குதலும்
செய்வராதலின் ”அம்பழி பொழுதில் தமர்முகம்காணா” என்றார்.
ஆளைக்கொல்லற்க வேண்டும் வாளைக்கொண்டு யானையையெறிதல்
கூடாமையின் “வாளிற்றாக்கா” னென்றார். தன் தலைவனான வேந்தன்
புறங்கொடுத் தோடியதனால் சினந்த ணியாது செல்லும் களிற்றுக்குத்
தீயையுவமித்து, “மாடமயங்கெரி” யென்றார், மாடங்களில் மண்டி யெரியுந்தீ
தன்னைப் பிறர் அணுகாதவாறு வெம்மை செய்து திரிந்து எதிர்ப்பட்ட
எல்லாவற்றையும் எரித்தழித்தல்போலக் களிறும் பகைவர் படைத்திரள்
நடுவுட்புகுந்து தீதுசெய்துதிரிந்தமை பெற்றாம். எரியின் என ஒப்புப் பகைவரது
தானைத்தலைவனொருவன் அதனை வெலெறிந்து வீழ்த்திவிட்டு மேல்வந்த
சோழன் தானையை எதிர்ந்து சென்று நேர்ந்தாரனைவரையும் உயிர் குடித்துத்
திரிந்தா னென்பான், “இரு நிலஞ்சேரச் சென்றோன் மன்றகொலைவன்”
என்றான். அவ்வாறு வெற்றியொடு வீறுற்று வந்த தலைவனை முன்சென்று
தாக்கி வெம்புண்ணுறுவித்தனை யென்பார், “வெம்புண்ணறிநர் கண்டு
கண்ணலைப்ப” என்றார். உயிரைப் போக்காது வெம்புண் தற்து வீழ்த்தியது
அவன்தன் வலியின் சிறுமையும் சோழன் வலியின் பெருமையும்
தெரிந்துணர்ந்த தொடுங்குவனென்றற்கு. குறுநில மன்னரினும் முடிமன்னர்
உயர்ந்தமை விளங்க, “விளங்கு திணைவேந்த” ரென்றார். எம்மிற் பெரியோர்
செய்ததனையே யானும் செய்தேன் என்பான், “மன்னெயின் முகவைக்கு
வந்திசின்” என்றும், பெரியோர் போல அத்துணைப் பெருமை
புடையேனல்லே னென்பான், “முற்றிலெனாயினும்” என்றும் கூறினான்.
பகைவர் என்புழிச் சிறப்பும்மை தொக்கது. பகைவர் புகழ்ந்து ஆண்மை,
“நண்ணாரு முட்குமென் பீடு” (குறள். 1088) என்றாற் போல வந்தது.
உடுக்கை இழந்தார்க்குக் கை சென்றுதவுதல் போல நண்பரது இடுக்கண்
களைவது பண்பாதல் பற்றி “நகைவர்க்குத் தாமின்றுதவும் பண்பின்”
என்றார். போர் நிகழுமிடங்களிலெல்லாம் வென்று களங்கொள்வதைத்
தவறாதே செய்து வந்தமை தோன்ற, “களங்கிழவோய்” என்றார்.
ஆர்ந்தென்பது அருந்தென வந்தது.

     விளக்கம்: குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் கொங்குபுறம் பெற்ற
செய்தியும் வஞ்சிமுற்றம் வயக்களனாக வென்ற செய்தியும் இப் பாட்டின்கட்
சிறந்தெடுத்துக் கூறப்படுகின்றன.

     கொங்கு நாட்டிற்கு  மேற்கின்கண்ணதாய்  மேலைக்கடற்கரையை
யடுத்திருக்கும் வஞ்சிநகர் முற்றத்தே போருடற்றி மேம்படுதலின்,