பக்கம் எண் :

365

     

“குடபுலத்ததரி கொண்டனை” யென்றார். குடபுலமென்றும் வஞ்சி
யென்றும் 
கூறியதனால், ஈண்டுக் கூறப்படும் வஞ்சி, கருவூரான வஞ்சிநகர்
அன்றென்பதாம். குடபுலத்து வஞ்சிநகர், இடைக்காலத்தே அஞ்சைக்
களமெனமருவி (S.I.I. Vol. V. No. 789) இப்போது திருவஞ்சிக்களமென
வழங்குகின்றது. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
இரும்பொறை காலத்தே காவிரிக்கரையிலுள்ள கருவூர்க்கு வஞ்சியென்ற
பெயரும், அமராவதி யாற்றுக்கு ஆன்பொருநை யென்ற பெயரும், அதற்கு
வடகிழக்கில் காவிரியின் வடகரையிலுள்ள மூதூர்க்கு முசிறி யென்ற
பெயரும் உண்டாயின. அதனை இவ்வுரைகாரர். எழுதிய “பண்டைநாளைச்
சேரமன்னர்கள்” என்ற நூலிற் காண்க. கருவூர்க்கு உண்டான வஞ்சி
யென்னும் பெயர் இப்போது வழக்கு வீழ்ந்தொழிந்து. இடைக்காலத்தும்
கருவூர் வஞ்சிநகரமென வழங்கினமை “வீரசோழ மண்டலத்து வெங்கால
நாட்டுக் கருவூரான வஞ்சிமாநகர்” (A. R. No. 335 of 1927-28)
என்பதனாலறியப்படும். தாராபுரமும் கொங்குவஞ்சி (A. R. No. 146 of 1920)
எனப்படுவது கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலுக்கு முன்னொரு
காலத்தில் உண்டாகியது. இவ்வளவனால் எறியப்பட்ட கருவூர் மேலைக்
கடற்கரையில் வஞ்சிநகர்க்கண்மையிலுள்ள கருவூர். முரசம் இடியென
முழங்க, களிறுகள் மேகக்கூட்டம்போல் அடர்ந்து செல்ல, குதிரைகள்
மழைத் தாரைபோலப் பாய்ந்தோட, வில்வீரர் எறிந்த அம்புகள் காற்றுப்
போற் சென்று மொதக் கொங்குநாட்டவர் எதிரூன்றி நிக்ற ஆற்றாது
புறந்தந்தோடினர். “கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” என்பதற்கும்,
“வேந்து புறங்கொடுத்த வீய்ந்துகுபறந்தலை” என்பதற்கும் இடையிற் கிடந்த
அடிகல் பல சிதைந் தொழிந்தமையின், அவற்றாற் குறிக்கப்படும் பொருள்
தெளிய விளங்கவில்லை. அச்சமுற்ற மயில் முன்னும் பின்னும் மேலும்
கீழுமாக மிக விரைந்து நடந்தும் பறந்தும் அலமருவது இயல்பு. அதுபோலப்
போர்க்குச் சென்ற கணவன் வாராமையால் மனையோள் மனவமைதி
பெறாது இல்லின்கண் அலமருகின்றாள் என்பது உவமத்தாற் பெறப்படுகிறது.
சுடுகாட்டில் பிணங்களைச் சுடுதற்கமைந்த இடம் மன்றம் எனப்படுவதும்,
அங்கே எரிவளர்த்துக் கணவனை யிழந்த மகளிர் அதன்கண் வீழ்ந்து
உயிர் கொடுப்பதும் வழக்காயினும், இம் மகளிர் அவற்றை உடனே செய்யக்
கருதாது போர்க்களம் சென்று கணவன் பெற்ற புண்ணின் திறங்காண்டற்குக்
களத்திற்கு  விரைந்தேகுகின்றன  ரென்பது  தோன்ற,  “மயில்  இயன்று
மரலியாங்கு நல்லில் புலம்பக் கடைகழிந்து மன்றம் பேணார் புண்ணுவந்து
படுகளம்  நோக்கிச்  சென்றனர்,”  என்று   கூறுகின்றார்.  இனி  மன்றம்
என்பதற்குப் பலரும் கூடுமிடம் எனக்கொண்டு, அங்கே சென்று அவர்
கூறுவன கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பாது களத்துக்குச் சென்றார்
எனக் கொள்ளினும் அமையும். இதனால் போரிற்பட்ட கணவன்
புறப்புண்பட்டு வீழ்ந்தானெனப் பழிப்புரை’ வந்தது போலும் எனக்
கருதலாம்; அடிகள் சிதைந்தமையின் உண்மை விளங்கிற்றன்று. புண்திறம்
காணச் சென்ற மனையோள் கணவன் போர்செய்த திறம் வாளிற்றாக்கான்
வேலிற்றாக்கிக் களிறு கோடிறுபு நிலஞ்சேரக் கொன்று வீழ்த்தி வெற்றியோடு
சென்றோன் மன்ற கொலைவன் உற்ற வெம்புண் அறிநர் கண்டு கண்ணலைத்து
வருந்தினரெனக் கூறப்படுகிறது போலும். இருநிலஞ் சேரக் கொன்றோன்
மன்ற என்றும் பாடம்.