பக்கம் எண் :

366

     

374. ஆய் அண்டிரன்

     வேள் ஆய்அண்டிரன் தன்னுடைய பொதியின் மலைக்கடியிலுள்ள
ஆய்க்குடியிலிருக்கையில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அவனை
யடைந்து இந்தப்பூவைநிலைப்பாட்டைப் பாடினார். இதன்கண் அண்டிரனது
வண்மைை வியந்து ஞாயிற்றை நோக்கி, “ஞாயிறே, விசும்பின்கண் வறிதே
விளங்குகின்ற நீ அண்டிரன்போலக் கை வண்மை யுடையையோ, கூறுக”
என்று கேட்கின்றார். மேலும், அண்டிரனுடைய கைவண்மையை விளக்கலுற்று,
விடியற்காலத்தே கிணைப் பறையைக் கொட்டி அண்டிரனது குறிஞ்சிமரங்கள்
நிறைந்த மலைப்பக்கத்தைப் பாடுவராயின், உறக்கத்திற் றீர்ந்த மான்கலைகள்
அவர் தம் இசையைச் செவிசாய்த்துக் கேட்கும்; மலைவாணர், இப்
பொருநர்கட்கு நல்ல விருந்தைச் செய்து, புலித்தோலைப்பரப்பி அதன்
மேல் மான்கறியும் சந்தனக்கட்டையும் யானைக்கோடுமாகிய மூன்றையும்
குவையாகப் பெய்து நல்குவர் என அவனது நாட்டவர் விருந்தோம்புங்
கூறுபாட்டில் வைத்துக் கூறியுள்ளார்.

 கான மேய்ந்து வியன்புலத் தல்கும்
புல்வாயிரலை நெற்றி யன்ன
பொலமிலங்கு சென்னிய பாறுமயி ரவியத்
தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
5மன்றப் பலவின் மாலரைப் பொருந்தியென்
 தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
இருங்கலை யோப்ப விசைஇக் காண்வரக்
கருங்கோற் குறிஞ்சி யடுக்கம் பாடப்
புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்
10 மான்கண் மகளிர்க் கான்றோ ரகன்றுறைச
 சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர் முகை யடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்
புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இருங்கேழ் வயப்புலி வரியதட் குவைஇ
15 விருந்திறை நல்கு நாட னெங்கோன்
 கழறொடி யாஅ யண்டிரன் போல
வண்மையு முடையையோ ஞாயிறு
கொன்விளங் குதியால் விசும்பி னானே.

     திணை: பாடாண்டிணை; துறை: பூவைநிலை, ஆய் அண்டிரனை
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.


     உரை: கானம்  மேய்ந்து  வியன்புலத்தல்கும் -  காட்டின்  கண்
மேய்ந்துவிட்டு  அகன்ற  கொல்லைக்கண்  தங்கும்;  புல்வாய்  இரலை
நெற்றியன்ன - புல்வாயென்னும் மானினது ஆணின் நெற்றிமயிர் போல;
பொலம் இலங்கு சென்னிய - பொற்றாமரை விளங்கும்