|       | இசைகொண்டு விளங்குதல்போல         விளக்கமுறாது வறிதே திகழ்கின்றா யென்பார்,       கொன் விளங்குதியால்         என்றார். பனியுறைக்கும் ஞாங்கர், பொருந்தி, தெளிர்ப்ப       ஒற்றி, பாட, ஆன்றோர்,         விருந்திறை நல்கும் நாடன், எங்கோன் அண்டிரன்போல,       விளங்குதி யாகலின், வண்மையுமுடையையோ         கூறுக எனக் கூட்டி வினைமுடிவு       செய்க. விருந்து இறைநல்கும் என்பதற்குப் புதிய புதியவாக         வழங்கும் என வுரைப்       பினுமமையும்.
               விளக்கம்:         பூவை நிலையாவது. கறவை காவல னிறனொடு பொரீஇ,          புறவலர் பூவைப்பூப் புகழ்ந்தன்று (பு.வெ.மா. 9:4) எனவரும். ஆசிரியர்          தொல்காப்பியரும், இதனை, மாயோன் மேயமன் பெருஞ்சிறப்பின், தாவா          விழுப்புகழ்ப் பூவைநிலை (தொல்.புறத். 5) என்று கூறுவர். பூவைநிலை          யென்பதற்குப் புறப்பொருள் வெண்பாமாலைகாரர் கூறுவது பொருந்தா         தென்பது நச்சினார்க்கினியர் கருத்து. இப் பொருந்தாமையை இளம்         பூரணர்க்கு முன்னிருந்த உரை காரரும் கண்டுள்ளனர்; அவரெல்லாம்,          மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப          என்று கூறி, அங்ஙனமாயின், ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்          என்பது பற்றி வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம்          பூவைநிலையாகக் கொள்க என்பர் இளம்பூரணர். அதனால் ஞாயிற்றோடு          உவமித்து வரும் இப்பாட்டு பூவைநிலையெனப்படுவதாயிற்று. ஆய்          அண்டிரனைப் போல ஒளியுடையை யாயினும், அவனைப்போல          வண்மையுடையையோ என்றது, ஞாயிற்றோடு உறழ்ந்து நின்றது; உறழ்வும்          பொரூஉ வகையே யெனக்கொள்க. இப் பாட்டு, கடந்தடுதானைச்          சேரலாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்... அகலிரு          விசும்பி னானும் பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறம். 8)          என்பதனோடு ஒப்புநோக்கத்தக்கது. அப் பாட்டையும் பூவைநிலையுமாம்          எனக் குறித்திருப்பது காண்க. இடைக்காலக் கல்வெட்டுகல் சில முடமோசி          நாரணக் கிரம வித்தன் என்று கூறுவதை நோக்கின் முடமோசி என்பது          குடிப்பெயர்போலும் என நினைப்பிக்கின்றது. 375. ஆய் அண்டிரன்      ஆய்         அண்டிரனை ஒருகால் ஏணிச்சேரி முடமோசியார் இனிய          பாட்டொன்றைப் பாடி மகிழ்வித்தாராக, அவன் அவர்க்குப் பெரும்          பொருளைப் பரிசில் நல்கினான். அதுகொண்டு அவர் அவனை வாழ்த்து          வாராய், இப் பாட்டால், ஆயே, பெருமழைக் கூட்டம் கடற்குச் சென்றாற்          போல யான் என் சுற்றத்தாருடமே நின்பால் வந்தேன்; நீ புலவர்கட்குப்          புகலிடமாய் இந்நிலவுகில் நெடிது வாழ்க; நீ இல்லாத வழி இவ்வுலகம்          வறுமையுறும்; அந்நாளில் இவ்வுலகிற் புலவர் இல்லாது ஒழிவாராக; ஒருகால்          உளராயின் அப் பீடின்றிப் பெருகிய பாடிலாச் செல்வரை என்றும்          எம்மினத்தவர் பாடாதொழிவாராக என்று எடுத்தோதியுள்ளார். |   | அலங்குகதிர்             சுமந்த கலங்கற் சூழி             நிலைதளர்வு தொலைந்த வொல்குநிலைப்பல்காற்             பொதியி லொருசிறைப் பள்ளி யாக             முழாஅரைப் போந்தை யரவாய் மாமடல் |  
  |