பக்கம் எண் :

369

     
 5.நாரும் போழுங் கிணையோடு சுருக்கி
 ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
ஊழிரந் துண்ணு முயவல் வாழ்க்கைப்
பிரசந் தூங்கு மறாஅ யாணர்
 10.வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந
 பொய்யா வீகைக் கழறொடி யாஅய்
யாவரு மின்மையிற் கிணைப்பத் தவாது
பெருமழை கடற்பரந் தாஅங் கியானும்
ஒருநின் னுள்ளி வந்தனெ னதனாற்
 15.புலவர் புக்கி லாகி நிலவரை
 நிலீஇய ரத்தை நீயே யொன்றே
நின்னின்று வறுவி தாகிய வுலகத்து
நிலவன் மாரோ புலவர் *துன்னிப்
பெரிய வோதினுஞ் சிறிய வுணராப்
 20.பீடின்று பெருகிய திருவிற்
 பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே.

     திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். அவனை யவர் பாடியது.

     உரை: அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி - அசைகின்ற கதிர்கள்
நிரம்பிக் கலங்கிக் கிடக்கும் நீர்நிலைபோல; நிலைதளர்வு தொலைந்த ஓங்கு
நிலைப் பல்காற் பொதியில் ஒருசிறை பள்ளியாக - நிலை தளர்ந்து பாழ்பட்ட
வெடித்துச் சீரழிந்த தரையையும் பல கால்களையுமுடைய மன்றத்தின் ஒரு
பக்கத்தைப் படுக்கையிடமாகக் கொண்டு; முழாஅரைப் போந்தை யரவாய்
மாமடல் நாரும் போழும் - முழவின் வாய்போன்ற அடியினையுடைய
பனையின் அரம்போலும் கருக்குப் பொருந்திய பெரிய மடலினின்று மெடுத்த
நாரையும் பனங்குருத்தையும்; கிணையொடு சுருக்கி - கிணையொடு சேர்த்துக்
கட்டி; ஏரின் வாழ்நர் குடி - ஏரால் உழுதுண்டு வாழ்வோர் மனையின்கட்
சென்று; ஊழ்முறை புகாஅ இரந்துண்ணும் வருத்தம் பொருந்திய வாழ்வை -
முறையே அவர் நல்கும் உணவை இரந்துண்ணும் வருத்தம் பொருந்திய
வாழ்வையுடைய எம்மை; புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என -
பாதுகாத்தலை மேற்கொள்ளும் சான்றோர் யாவருளர் என்று நினைந்து;
பிரசம் தூங்கும் அறாஅயாணர் - தேன் கூடுகள் தொங்குகின்ற நீங்காத
புது வருவாயையுடைய; வரையணி


*இரவலர் என்றும் பாடவேறுபாடுண்டு.