பக்கம் எண் :

371

     

இன்மை காண மாட்டாத புரவலனான ஆய் அண்டிரனுக்குப் பின்
அத்தகைய புரவுக் கடன் புரியும் சான்றோர் உளராவ தரிதென்னுங்
கருத்தால், “நிலவன் மாரோ இரவலர்” என்றான் எனக் கொள்க. பீடின்று
பெருகுந் திருவுடைமையிலே கண்ணுங் கருத்தும் ஒன்றியிருத்தலின்,
பாடிலராகிய வேந்தர்க்கு அறியுந்திறம் இலதாமென்பார், “பெரிய வோதினும்
சிறிய வுணரா” என்றார். அவரைப் பாடியவழிப் புலவரது புலமை பாடுபெறா
தழியும் என்பார், “பாடன்மார் எமரே” என்றார். இடைக்காலத்தும்
இக்காலத்தும் தாயிருக்கப் பேய்க்கு வழிபாடு செய்யும் பாடின் மனனர்களும்
தலைவர்களும் உளரான தன் பயனாகப் பண்டை நாளைச் செந்தமிழ் மூன்றும்
சீரழிந்த போனதை வரலாறு வற்புறுத்துதலால் ஏணிச்சேரி முடமோசியார்
அன்று கூறியது வாய்மையாதல் தெள்ளிதாம்.

     விளக்கம்: வாழ்த்தியல் என்பதுதலைமகனொருவனுடைய வென்றியும்
குணமும் ஏத்தி வாழ்த்துவதாகும். “அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி
வாழ்த்து” (தொல். புறத். 29) என்பதனை  இளம்பூரணர்  முதலியோர்
“இயன்மொழி யெனவும் வாழ்த்தெனவும் இயன்மொழி வாழ்த்தெனவும்
மூவகைப்படும்” என்பர். இம் மூன்றனுள் ஒன்றாகிய வாழ்த்து ஈண்டு
“வாழ்த்தியல்” எனப்பட்டது. இப்பாட்டின்கண் கிணைப் பொருநன் புரப்போர்
பிறர் இன்மை தேர்ந்து ஆய் அண்டிரன் பால் அடைந்து அவனை வாழ்த்தும்
கருத்தில் இப்பாட்டு அமைந்துள்ளது. ஆய் அண்டிரன் தென் பாண்டி
நாட்டுப்பொதியின் மலையடியில் ஆய்க்குடியிலிருந்து ஆட்சிபுரிந்து
வருகையில் புலவர், கூத்தர், பாணர், பொருநர் முதலியோர் நல்ை தேர்ந்து
புரக்கும் நற்குடிச் செல்வர் குறைந்தனர். ஏணிச்சேரி முடமோசியார் அவர்
குறிப்பனைத்தும் பொருளீட்டுதலிலே ஒன்றியிருந்ததை யுணர்ந்தார். இந்நிலை
கி.பி. நான்காம் நூற்றாண்டிலும் இருந்ததென்பதை அக்காலத்தே நம்
நாட்டிற்கு வந்த சீனச்சான்றோர் எழுதியுள்ள குறிப்புகள் எடுத்தோதுகின்றன.
புரப்போர் புறக்கணித் தமையின் பொருநன் ஏர் வாழ்நர் குடிகட்குச் சென்று
முறையே உணவு இரந்துண்ணும் நிலையடைந்து வருந்திய திறத்தை, “ஏரின்
வாழ்நர் குடிமுறைப் புகாஅ, ஊழிரந்துண்ணும் உயவர் வாழ்வு” என்று
குறித்தார். சான்றோர் யாரென நோக்கினேன்; நோக்கினேனுக்கு ஒருவரும்
காணப்பட்டிலர் என்பார், “யாவரும் இன்மையின்” என்றார். “பெருமழை
கடற்பரந்தாங்கு நின்னுள்ளி வந்தனென்” என்றது, கடனீரை முகந்த மழை
யாமும் செல்வர் தரும் பெருவளத்தின் தீமை போக்கி நன்மையை
உலகுயிர்கள் பெறச்செய்வேம் என்பது.

376. ஓய்மான் நல்லியக் கோடன்

     புறத்திணையைப் பாடுதலில் மிகச்சிறந்த நல்லிசைப் புலவராகிய
நன்னாகனார் ஒருகால் ஓய்மான் நல்லியக் கோடனைக் காண்டற்கு அவனூரில்
அவனது நெடுமனையை யடைந்தார். அக்கால பகற்போது கழிந்ததனால்
அந்திமாலை வந்திருந்தது. ஒளிகுறைய மெல்லிய இைளிருள் பரந்தது. பாணர்
உணவுண்டற்கமைந்திருந்தனர். அவ்வளவில், வறுமையுற்று மெலிந்து
உருமாறியிருந்தநாகனார் நல்லியக்கோடனுடைய நெடுமனைக்கண்ணின்ற
நெற்கூட்டின் அடியில் நின்றனர். நல்லிக் கோடன் அவரைக்
கண்டமாத்திரையே அவரை இன்னாரென ஆராயாமலே அவர்