பக்கம் எண் :

372

     

இடையில் சிதறிப் பீறிக்கிடந்த உடையை மாற்றி வேறோ ருடைதந்து
மெலிவுண்டு பொறானாய்ப் பாடிநின்ற அவரது கைத் தாளத்தைத் தான்
வாங்கிக்கொண்டு கட்டெளிவும் சூட்டிறைச்சியுந் தந்து, உண்பித்து,
இரவுப்போதாயிற்றே என்று சிறிதும் நினையாது அவரைப்பற்றி நிரயத்
துன்பத்தைத் தந்துகொண்டிருந்த வறுமை நீங்கப் பெருஞ் செல்வத்தை
நல்கினான். அது பெற்றுப் பெரு மகிழ்ச்சி கொண்ட நன்னாகனார் கிணைப்
பொருநன் ஒருவன் கூற்றின் வைத்து இப்பாட்டைப் பாடினார். இதன்கண்
பொருநன் நல்லியக் கோடன் தனக்குச்செய்த கொடைநலத்தை யெடுத்தோதி,
“அன்று முதல் யான் வரையாது வழங்கும் பெருவள்ளியோராயினும் பிறர்
மனைவாய் நின்று இரத்தற்கு நினையேனாயினேன். என் கிணைப்பறையின்
சிறு குரல் தானும் பிறசெல்வரது நெடுமொழியைப் பாடி இசைக்காதாயிற்று,”
என்று குறித்துள்ளான்.

 விசும்பு நீத்த மிறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங் கந்தி
சிறுநனி யிறந்த பின்றைச் செறிபிணிச்
சிதாஅர் வள்பினென் றெடாரி தழீஇப்
 5. பாண ராரு மளவை யான்றன்
 யாணர் நன்மனைக் கூட்டுமுத னின்றனென்
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்றப்
பண்டறி வாரா வருவோ டென்னரைத்
 10.தொன்றுபடு துளையொடு பெருவிழை போகி
 நைந்துகரை பறைந்தவென் னுடையு நோக்கி
விருந்தின னளிய னிவனெனப் பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
 15.நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றே
 இரவி னானே யீத்தோ னெந்தை
அன்றை ஞான்றினொ டின்றி னூங்கும்
இரப்பச் சிந்தியே னிரப்படு புணையின்
உளத்தி ளைக்கு மிளிர்ந்த தகையேன்
 20.நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
 ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர்
                            கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாதென் சிறுகிணைக் குரலே.

     திணை: அது. துறை: இயல்மொழி. ஓய்மான் நல்லியக் கோடனைப்
புறத்திணை நன்னாகனார் பாடியது.