| உரை: விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய -விசும்பின்கண்ணதாகிய நீத்தத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றினுடைய பசிய கதிர் ஒளி குறைந்த; சிவந்து வாங்கு அந்தி சிறுநனி இறந்த பின்றை - செந்நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து தோன்றும் அந்திமாலைப் போதின் மிகச் சிறு பொழுது கழிந்த பின்னர்; செறிபிணிச் சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ - செறியப் பிணிக்கும் துண்டான வார்களாற் கட்டப்பட்ட எனது தடாரிப் பறையை ஒருபால் தழுவிக் கொண்டு; பாணர் ஆரும் அளவை - பாணர்கள் உணவு உண்ணும் அளவில்; யான்தன் யாணர் நன்மனைக் கூட்டிமுதல் நின்றனென் - யான் அவனுடைய புதுமையறாத நல்ல பெருமனைக்கண் நின்ற நெற்கரிசையின் அடியில் நின்று பாடினேனாக; இமைத்தோர் விழித்த மாத்திரை - இமைத்த கண்விழிக்குமளவிலே; ஞெரேலென - விரைவாக; குணக்கெழு திங்கள் கனையிருள் அகற்ற - கிழக்கே யெழுந்த மதியம் செறிந்திருந்த இருளை நீக்க; பண்டு அறிவாரா உருவோடு - முன்பிருந்த எனது நிலையையறிய இலாதவாறு மாறியிருந்த உருவோடு; என் அரை - எனது இடையிலேயிருந்த, தொன்றுபடு துளையொடு பருவிழை போகி - பழைமையுற்றுத் துளைகளுடனே பருத்த இழைகள் கெட்டு; நைந்து கரை பறைந்த - மெலிநது கரை கிழிந்து கிடந்த; என் உடையும் நோக்கி - எனது உடையையும் பார்த்து; இவன் விருந்தினன் அளியன் என் - இவன் புதியன் அளிக்கத் தக்கானாவன் என்று சொல்லி; பெருந்தகை - பெரிய தகைமையினையுடையனாகிய அவன்; நின்ற முரற்கை நீக்கி - என் கையில் நின்ற தாளத்தைத் தான் வாங்கிக்கொண்டு; நன்றும் அரவு வெகுண்டன்ன தேறலொடு - பாம்பு சீறினாற்போற் பெரிதும் களிப்புற்ற கட்டெளிவுடனே; சூடு தருபு - சூட்டிறைச்சி தந்து; நிரயத்தன்ன என் வறன் களைந்து - நிரயம்போலத் துன்பம் செய்த என் வறுமையைப் போக்கி; அன்று இரவினான் ஈத்தோன் - அவ்விரவுப்போதிலே வேண்டுவன கொடுத்தான்; எந்தை - என் தலைவன்; நிரப்புடு புணையின் - வறுமையாகிய கடலைக் கடக்கும் தெப்பமாக அவன் இருத்தலால்; அன்றை ஞான் றினோடு இன்றினூங்கும் - அந்நாளிலிருந்து இன்றும் இனி மேலும்; இரப்பச் சிந்தியேன் - பிறர்பாற் சென்று இரத்தலை நினையேனாயினேன்; உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் - பிறர் உளத்தின்கண் நிகழ்வனவற்றை உள்ளத்தா லளந்தறியும் விளங்குகின்ற மகிழ்ந்தனெனாகி - நீர் நிறைந்த குளத்தின் வாய்த்தலை போல உண்ணிறைந் துந்தும் மகிழ்ச்சி யுடையேனாய்; ஒரு நாள் இரவல வரையா வள்ளியோர் கடைத்தலை - |