பக்கம் எண் :

374

     

ஒருநாளும் தம்பால் வரும் இரவலரை மறுத்தலில்லாத வள்ளன்மை
யுடையோர் தலைவாயிலும்; ஞாங்கர் நெடுமொழி பயிற்றி - அவர் பக்கத்து
நெடும்புகழ் விளைக்கும் நலங்களைப் பாராட்டி ஒன்று பெறுதற்கு; தோன்றல்
செல்லாது - அசையாதாயிற்று; என் சிறு கிணைக்குரல் - எனது சிறியதாகிய
கிணைப்பறையின் ஓசை; எ - று.


     நிலமுதல் வளியீறாகவுள்ள நால்வகை மண்டிலங்களையும் கடந்து
நிற்றலின் விசும்புநீத்தவெனப்பட்டது; “வெளியிடை வழங்காவழக்கரு நீத்தம்”
(புறம். 365) என்று பிறரும் குறித்துரைப்பது காண்க. நீத்த மென்றதனைக்
கடற்காக்கி, விசும்பாகிய கடலை ஞாயிறு நீந்திச்செல்வதாகக் கொண்டு
உரைத்தலுண்டு. மாலைவெயில் வெம்மை குன்றித் தட்பமும்
செம்மையும்பெறுதலின் “பசுங்கதிர்” என்றார். “சுடர்கெழு மண்டில மழுக
ஞாயிறு, குடகடல் சேரும் படர்கூர் மாலை2 (அகம். 378) என்று பிறரும்
கூறுவர். அந்திமாலையின் செவ்வொளி மழுக இளையிருள் பரவும்
மருண்மாலைப் போதினைக் காட்டற்கு “அந்தி சிறு நனி பிறந்த பின்றை”
என்கின்றார்; அந்திமாலையின் ஞாயிற்றின் செங்கதிர் நேரே நிலவுலகிற்
பாயாமல், அதனைச் சூழ்ந்துள்ள வளிமண்டிலத்தால் அளைந்து (Refracted)
வீழ்விக்கப்படுதல்பற்றி, “வாங்கந்தி” என்றும் வளிமண்டிலத்துப்பரவிச்
செறிந்திருக்கும் துகளொளியாற் செங்கதிர் பசுங்கதிராகிற் றென்பது விளங்கப்
“பசுங்கதி” ரென்றும் வழங்குகின்றமை உணர்ந்துகொள்க. இருள் பரந்த
அருண் மாலைப்போதில் பாணரும் நுளையரும் சோறுண்பது மரபு; “மலையின்
வாயிற்சோறும்” எனவழங்கும். கூடு, நெற்கூடு; கரியையுமாம். ஞெரேரென:
விரைவுக் குறிப்பு. பண்டறிவாரா வுருவென்றது,நன்னாகனார்
நல்லியக்கோடனால் முன்பே அறியப்பட்டவரென்பது சுட்டி நின்றது.
கரப்பகுதி பருவிழையா லமைந்ததாகலின், “பருவிழை போகி நைந்து”
விருந்தின்னென அவன்கூறியதை வற்புறுத்தி நின்றது. நாட்பட்டுக் களிப்பு
மிக்குற்ற கள்ளை “அரவு வெகுண்டன்ன தேறல்” என்றார்; “பாம்பு
வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண். 237) எனப் பிறரும் கூறுவர். ஒப்பதும்
மிக்கது மில்லாத துன்பநிலையம் நிரயமாகலின், தனக்குத் தானே யொப்பாகிய
(குறள். 1041) வறுமை “நிரயத்தன்ன, வறன்” “இரவி னானே யீத்தோ”
னென்றார். “நிரப்படு புணையின்” என்றது, இரப்பச் சிந்தியாமைக்கு ஏதுவாய்
நின்றது. தன்னுள்ளத்தால் பிறர் உள்ளத்தின்கண் நிகழ்வன அளந்தறியும்
ஒள்ளிய புலமை தன்பால் உண்மையினை அடங்கிய வாய்பாட்டாற் கூறுதலின்,
“உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையே” என்றார். மிளிர்ந்த தகை,
விளங்குகின்ற புலமையழகு. கரை புரண்டு வழிந்தெழும் மகிழ்ச்சி தகை,
விளங்குகின்ற புலமையழகு. கரை புரண்டு வழிந்தெழும் மகிழ்ச்சி வெள்ளத்தை
அறிவால் அடக்கினும் அடக்கினும் அடங்காது முகத்தின்வழிப் புலப்பட
நிற்கும் தமது நிலையை, “நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெனாகி” யென்றார்.
இரவலர் வரையா வள்ளியோ ரிடத்தில் இரவலர் இரத்தல் இனிதாயினும் (குறள்
1053) அதனையும் யான் செய்ய விழைந்திலேன் என்பார். “இரவலர் வரையா
வள்ளியோ கடைத்தலைத் தோன்றல் செல்லாது என்சிறு கிணைக்குரல்”,
யென்ப. அந்தி இறந்த பின்றை, தழீஇ நின்றெனனாக, திங்கள் இருளகற்ற,
உருவோடு உடையும் நோக்கி, நீக்கி களைந்து, பெருந்தகை, ஈத்தோன்”
தகையேன், மகிழ்ந்தனெனாகி, புணையின்